போர்ட் மோர்ஸ்பி,
20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந் தேதி (இந்திய நேரப்படி ஜூன் 2ம் தேதி) முதல் 29-ந் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க உள்ளது. இந்தப் போட்டி தொடரில் பங்கேற்கும் 20 அணிகளும் 15 பேர் கொண்ட அணியை அறிவித்து வருகின்றன.
ஏற்கெனவே நியூசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், நேபாளம், ஓமன், அமெரிக்கா, உகாண்டா, ஸ்காட்லாந்து, அயர்லாந்து போன்ற நாடுகள் தங்களது அணிகளை அறிவித்துவிட்டன.
இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்க உள்ள பப்புவா நியூ கினியா அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த அணிக்கு அசாதுல்லா வாலா கேப்டனாகவும், சி.ஜெ. அமினி துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பப்புவா நியூ கினியா அணி விவரம்; அசாதுல்லா வாலா (கேப்டன்), சி.ஜெ. அமினி (துணை கேப்டன்), அலி நாவோ, சாட் சோப்பர், ஹிலா வரே, ஹிரி ஹிரி, ஜாக் கார்ட்னர், ஜான் கரிகோ, கபுவா வாகி மோரியா, கிப்லிங் டோரிகா, லெகா சியாக்கா, நார்மன் வனுவா, செமா கமியா, செசே பாவ், டோனி ஊரா.