SRHvLSG: `இந்த அடியெல்லாம் TV -ல மட்டும்தான் பார்த்திருக்கேன்!' – புலம்பும் கே.எல்.ராகுல்

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டி ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றிருந்தது.

முதலில் பேட் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை எடுத்திருந்தது.

பேட்டிங் ஆடுவதற்கு சிரமமான பிட்ச் என்பதைப் போன்ற தோற்றத்தை லக்னோ அணியின் செயல்பாடு கொடுத்தது. ஆனால், சேஸ் செய்த சன்ரைசர்ஸ் அணி இதெல்லாம் ஒரு டார்கெட்டா என்பது போல இந்த டார்கெட்டை ட்ரீட் செய்தது. அபிஷேக் சர்மாவும் ட்ராவிஸ் ஹெட்டும் நின்று வெளுத்தெடுத்து 9.4 ஓவர்களிலேயே போட்டியை வென்று கொடுத்துவிட்டார்கள்.

போட்டிக்குப் பிறகு தோல்வி குறித்து கடும் மிரட்சியோடு லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல். பேசியிருக்கிறார்.

கே.எல்.ராகுல்

கே.எல்.ராகுல் பேசியதாவது, ‘சன்ரைசர்ஸ் அணியின் சேஸிங் கற்பனை செய்ய முடியாததாக இருந்தது. அவர்களின் ஆட்டத்தை வார்த்தைகளில் விவரிக்க முடியவில்லை. தொலைக்காட்சியில் மட்டும்தான் இப்படியான ஆட்டத்தை பார்த்திருக்கிறோம். இன்று எங்களுக்கு எதிராகவே அப்படி ஆடிவிட்டார்கள். அவர்களால் எல்லா ஷாட்களையும் மிடில் ஆப் தி பேட்டில் கனெக்ட் செய்ய முடிந்தது. அவர்களின் திறனுக்கு நான் தலை வணங்குகிறேன். சிக்சர் அடிக்கும் திறனை வளர்த்துக் கொள்வதில் அதிக கவனம் செலுத்தி பயிற்சி மேற்கொண்டிருக்கிறார்கள்.

முதல் இன்னிங்ஸ் முடிந்த பிறகு பிட்ச்சில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. பிட்ச்சைப் பற்றி நாங்கள் அறிந்து கொள்வதற்கான நேரத்தையும் வாய்ப்பையும் கூட அவர்கள் எங்களுக்கு கொடுக்கவில்லை. முதல் பந்திலிருந்தே அதிரடியாக தொடங்கிவிட்டார்கள். அவர்களை தடுத்து நிறுத்த எங்களுக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை.

தோல்வியடைந்த அணியாக இருக்கும்போது நாம் நிறைய கேள்விகளுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் கேள்விக்கு உட்படுத்தப்படும். பவர்ப்ளேயில் விக்கெட்டுகளை இழந்தோம். மொமண்டமே கிடைக்கவில்லை. நிக்கோலஸ் பூரனும் ஆயுஷ் பதோனியும் நன்றாக ஆடியதால்தான் 166 ரன்களையே எடுத்தோம். சன்ரைசர்ஸ் அணியின் பேட்டர்கள் ஒரு சுதந்திரமான மனநிலையோடு அதிரடியாக ஆடும் அணுகுமுறையுடனேயே வந்திருந்தனர். அவர்கள் 250 ரன்களை டார்கெட்டாக நிர்ணயித்திருந்தாலும் சேஸ் செய்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.’ என்றார். கே.எல்.ராகுல் சொல்லும் காரணங்கள் பற்றிய உங்களின் கருத்துகளை கமென்ட் செய்யுங்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.