ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2023 விழாவில் மோனிஷா பிளசி டாப் 10 இளைஞருக்கான விருதைப் பெற்றார்.
விருதைப் பெற்றப்பின் பேசிய மோனிஷா பிளசி, “ என்னை நம்பி வாய்ப்புக் கொடுத்த அனைவருக்கும் நன்றி. முக்கியமாக என் அப்பா, அம்மாவுக்கு நன்றி சொல்ல வேண்டும். எனக்கு மிகவும் சப்போர்ட்டாக இருந்தார்கள். நான் நிறையவே தோற்றுபோகி இருக்கிறேன். அந்த சமயத்தில் எனக்கு ஆதரவாக இருந்திருக்கிறார்கள்.
மாவீரன் மாதிரியான படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால் இன்னும் ஒரு பத்து வருடம் ஓட வேண்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால் அந்த படத்தில் ஆடிசனுக்குச் சென்று நடிக்க வாய்ப்பு கிடைத்தது எல்லாம் எனக்கு ஒரு கனவு மாதிரித்தான் இருந்தது. சிவகார்த்திகேயன் அண்ணன், சரிதா மேம் என அவர்களுடன் பணிபுரிந்த அனுபவம் வாழ்நாள் முழுவதும் உதவியாக இருக்கும் என்று எமோஷனலாகப் பேசினார். மோனிஷா பிளசி பேசியதைக் காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.