பஜாஜ் ஆட்டோவின் பல்சர் NS400Z vs பல்சர் NS200 என இரு மோட்டார்சைக்கிளும் பல்வேறு சிறப்பு அம்சங்களை பெற்று ஒப்பீட்டளவில் இரு மாடல்களில் உள்ள வித்தியாசம் மற்றும் ஒற்றுமைகளை அறிந்து கொள்ளலாம்.
ஒரே மாதிரியான பிளாட்ஃபாரத்தை பகிர்ந்து கொண்டாலும் கூட என்ஜின் உட்பட சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் என்பது பல்சர் 400 மாடலுக்கு பெற்றுள்ள நிலையில் அதே நேரத்தில் விலையில் 400 சிசி பைக் மற்றும் 200 சிசி பைக்கிற்கும் மிகக் குறைவான வித்தியாசம் அமைந்திருப்பது தான் (ரூ.28,000 மட்டுமே விலை வித்தியாசம்) இங்கே மிகப்பெரிய சவாலாக அமைந்திருக்கின்றது. 400 சிசி பைக்குகளில் உள்ள பெரும்பாலான மாடல்களின் விலையை விட மிக மலிவாக பல்சர் NS400Z அமைந்திருக்கின்றது.
பல்சர் என்எஸ் 400 விலை மலிவாக இருக்க என்ன காரணம் ?
பஜாஜ் ஆட்டோ விலை மலிவாக இருக்க பல்சர் NS400 பைக்கில் உள்ள பெரும்பாலான உதிரிபாகங்களை மற்ற மாடல்களுடன் பகிர்ந்து கொள்ளவதே முக்கிய காரணமாகும். குறிப்பாக பைக்கின் பெட்ரோல் டேங்க் உட்பட இருக்கை, பின்புறத்தில் உள்ள பாகங்கள் எல்இடி டெயில் லைட், பின்புற சஸ்பென்ஷன், 17 அங்குல அலாய் வீல் போன்றவை என்எஸ் 200 பைக்கில் உள்ளதை போன்றே அமைந்துள்ளது.
அடுத்து, மிக முக்கியமாக 373சிசி என்ஜின் டோமினார் 400, கேடிஎம் 390 அட்வென்ச்சர் உள்ளிட்ட மாடல்கள் பகிர்ந்து கொள்ளுகின்றன. முந்தைய தலைமுறை கேடிஎம் 390 டியூக் மாடலும் இதே என்ஜினை பெற்றிருந்தது.
ட்ரையம்ப் ஸ்பீடு 400 பைக்கில் இடம்பெற்றுள்ள 43 மிமீ யூஎஸ்டி ஃபோர்க் சஸ்பென்ஷன் பெற்றதாக அமைந்துள்ளது. இவ்வாறு, தனது போர்ட்ஃபோலியோவில் உள்ள மற்ற மாடல்களுடன் உதிரிபாகங்களை பகிர்ந்து கொண்டுள்ளது. இதன் காரணமாகவே அறிமுக சலுகை விலை ரூ.1.85 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பல்சர் என்எஸ்200 மாடலை விட ரூ.28,000 கூடுதலாகவும், ரூ.46,000 வரை டாமினார் 400 பைக்கை விட விலை குறைவாகவும் அமைந்துள்ளது.
Bajaj Pulsar NS400Z vs Pulsar NS200
பல்சர் 400 மற்றும் என்எஸ் 200 என இரு பைக் மாடலில் உள்ள என்ஜின் உட்பட முக்கிய விபரங்களை ஒப்பீடு செய்து அதன் விபரத்தை அட்டவனையில் அறிந்து கொள்ளலாம்.
Pulsar NS400Z | Pulsar NS200 | |
என்ஜின் | 373cc single cyl liquid cooled | 199.5cc single cyl, liquid cooled |
பவர் | 40 Ps | 24.5 Ps |
டார்க் | 35Nm | 18.74Nm |
கியர்பாக்ஸ் | 6 speed | 6 speed |
பல்சர் என்எஸ் 200 மாடலை விட 15.5 ps வரை கூடுதல் பவரை வெளிப்படுத்துகின்ற பல்சர் என்எஸ் 400 பைக்கில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் அதிகபட்ச வேக மணிக்கு 160 கிமீ வரை உண்மையான ரைடிங் அனுபவத்தில் பெற முடிகின்றது.
சஸ்பென்ஷன், பிரேக்கிங் ஒப்பீடு
Pulsar NS400Z | Pulsar NS200 | |
முன்பக்க சஸ்பென்ஷன் | 43 மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க் | அப்சைடு டவுன் ஃபோர்க் |
பின்புறம் சஸ்பென்ஷன் | மோனோஷாக் | மோனோஷாக் |
டயர் முன்புறம் | 110/70-17 | 100/80-17 |
டயர் பின்புறம் | 140/70-17 | 130/70-17 |
பிரேக் முன்புறம் | 320mm டிஸ்க் | 300mm டிஸ்க் |
பிரேக் பின்புறம் | 230mm டிஸ்க் | 230mm டிஸ்க் |
வீல்பேஸ் | 1344mm | 1363mm |
கிரவுண்ட் கிளியரண்ஸ் | 168mm | 168mm |
எடை | 174 KG | 158 KG |
எரிபொருள் டேங்க் கொள்ளளவு | 805mm | 807mm |
இருக்கை உயரம் | 35Nm | 18.74Nm |
இரு மாடல்களும் டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்றாலும் 400சிசி பல்சர் பைக்கில் ரைடிங் மோடுகள் இடம்பெற்றுள்ளது. ஆதே போல இரண்டும் டிஜிட்டல் கிளஸ்ட்டர் பெற்றாலும் சற்று கூடுதலான கனெக்ட்டிவிட்டி வசதிகளை 400 பல்சர் பெறுகின்றது.
பல்சர் என்எஸ்400, என்எஸ்200 ஆன்ரோடு விலை ஒப்பீடு
எக்ஸ்ஷோரூம் | ஆன்ரோடு | |
Pulsar NS400Z | ₹ 1.85 லட்சம் | ₹ 2.29 லட்சம் |
Pulsar NS200 | ₹ 1.58 லட்சம் | ₹ 1.83 லட்சம் |
இரு மாடல்களுக்கும் இடையே உள்ள விலை வித்தியாசம் மிகவும் சவாலாகவே உள்ளது. கூடுதல் பவர், சிறப்பான ரைடிங் டைனமிக்ஸ், ரைடிங் மோடுகளை பெற விரும்பினால் பல்சர் NS400Z பைக்கினை தேர்வு செய்யலாம் அல்லது கூடுதல் மைலேஜ் பெற விரும்பினால் என்எஸ் 200 பைக்கினை வாங்கலாம்
(all Price on road Tamil nadu)