நாடாளுமன்றத் தேர்தலின் நான்காம் கட்ட வாக்குப்பதிவு மே 13-ம் தேதி 10 மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதி என மொத்தம் 96 மக்களவைத் தொகுதிகளில் நடைபெறவிருக்கிறது. இதில் ஆந்திராவின் 25 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுவதோடு, மாநிலத்தின் 175 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. இதில், ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சி-பா.ஜ.க-ஜனசேனா கட்சி, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவுகிறது.
பா.ஜ.க தொடர்ச்சியாக தனது பிரசாரங்களில் மத அடிப்படையில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கூடாது என்று தீவிரமாகக் கூறிவருகிறது. குறிப்பாக பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் இந்தப் பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். நேற்றுகூட தெலங்கானாவில் நடைபெற்ற பிரசாரத்தில், “முஸ்லிம் இட ஒதுக்கீட்டை நீக்கிவிட்டு, எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி இட ஒதுக்கீட்டை அதிகரிப்போம்” என அமித் ஷா பேசியிருக்கிறார்.
இந்த நிலையில், ஆந்திராவில் முஸ்லிம்களுக்கான 4 சதவிகித இட ஒதுக்கீடு நீடிக்கும் என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உறுதியளித்திருக்கிறார். கர்னூலில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஜெகன்மோகன் ரெட்டி, “ஒருபக்கம், 4 சதவிகித முஸ்லிம் இட ஒதுக்கீட்டை நீக்கும் பா.ஜ.க-வுடன் சந்திரபாபு நாயுடு தொடர்ந்து கைகோத்துக்கொண்டு, மறுபக்கம் சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெற புதிய நாடகத்தைக் கொண்டு வருகிறார்.
இப்படி சந்திரபாபு நாயுடு போன்ற பச்சோந்தியை எங்காவது பார்த்திருக்கிறீர்களா… சந்திரபாபு நாயுடுவிடம் எனது ஒரே கேள்வி, 4 சதவிகித இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதாக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு உறுதியளித்த பிறகும், எதற்காக அந்தக் கூட்டணியில் தொடர்கிறார்… எனவே என்ன வந்தாலும் சரி, முஸ்லிம்களுக்கான 4 சதவித இட ஒதுக்கீடு அப்படியே நீடிக்கும், அதுவே ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் இறுதி வார்த்தை” என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb