பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்காக சொத்து சேர்த்து வைப்பதுண்டு. சில நேரங்களில் சேர்த்து வைத்த சொத்து குறித்து பிள்ளைகளிடம் சொல்லாமல் எதிர்பாராத விதமாக பெற்றோர் இறந்துவிடும் பட்சத்தில் அந்த சொத்து யாருக்கும் பயனளிக்காமல் போய் விடும் சம்பவங்களும் நடக்கிறது. அதுபோன்ற ஒரு நிலைதான் கோவாவை சேர்ந்த ஒருவரின் மகன்களுக்கு ஏற்பட்டுள்ளது. கோவாவின் பர்தேஷ் தாலுகாவில் இருக்கும் மப்ஷா என்ற இடத்தை சேர்ந்த ஜார்ஜ் என்பவரின் மகன்கள் வெளிநாட்டில் வசிக்கின்றார்கள்.
ஜார்ஜ் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். மகன்கள் தொடர்ந்து வெளிநாட்டில் வசித்து வந்த நிலையில் ஜார்ஜ் வீடு பல ஆண்டுகளாக பூட்டப்பட்டு கிடந்தது. இந்நிலையில் தந்தையின் சொத்துக்களை விற்பனை செய்வதற்காக மகன்கள் வெளிநாட்டில் இருந்து கோவாவுக்கு வந்தனர். அப்போது அவர்கள் தங்களது தந்தை வசித்த பூர்வீக வீட்டை திறந்து என்ன இருக்கிறது என்று பார்த்தனர்.
அதில் வங்கி லாக்கர் சாவிகளும் சில ஆவணங்களும் இருந்தன. இதையடுத்து சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று அனைத்து நடைமுறைகளையும் முடித்து மூன்று லாக்கரை திறந்து பார்த்தபோது மகன்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. காரணம் அதில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்தன. தோராயமாக ரூ. 3 கோடிக்கு பணம் இருந்தது. ஆனால் அவை அனைத்தும் காலாவதியான பழைய ரூபாய் நோட்டுகள் ஆகும்.
அந்த நோட்டுகள் அனைத்தும் மத்திய அரசால் செல்லாது என்று அறிவிக்கப்பட்டவையாகும். அந்த நோட்டுகள் எதுவும் மகன்களுக்கு உதவாது. தந்தை இறந்து 12 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இடையில் பிள்ளைகள் வந்திருந்தால் தந்தை சேமித்து வைத்திருந்த சொத்துக்களை பயன்படுத்தி இருக்க முடியும். ஆனால் இப்போது ஜார்ஜ் கஷ்டப்பட்டு தனது பிள்ளைகளுக்காக சேமித்த பணம் எதுவும் பயன்படாமல் போய்விட்டது. மேலும்சில லட்சங்கள் மதிப்பிலான நகைகளும் இருந்திருக்கிறது. அது மட்டும் தான் தற்போது மகன்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் தங்களின் பெற்றோர்கள் தங்களின் வாழ்நாளில் இத்தனை பணத்தை சம்பாத்தித்த விஷயமே தங்களுக்கு தெரியாது எனவும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88