டாடா பஞ்ச், ஹூண்டாய் எக்ஸ்டர் உள்ளிட்ட சிறிய ரக எஸ்யூவி மாடல்களை எதிர்கொள்ள கியா தயாரித்து வருகின்ற கிளாவிஸ் என அறியப்பட்ட மாடலின் பெயர் சிரோஸ் (Kia Syros) என விற்பனைக்கு ரூ.6.50 லட்சத்தில் நடப்பு 2024 ஆம் ஆண்டின் இறுதி அல்லது 2025 ஆம் ஆண்டின் துவக்கத்தில் வெளியிடப்படலாம்.
நடப்பு ஆண்டில் முதற்கட்டமாக சிரோஸ் ICE மாடல் வெளியாகுவதுடன் சற்று தாமதமாக EV மாடலும் விற்பனைக்கு வெளியாகும் என ஏற்கனவே உறுதிப்படுத்தப்படுள்ளது.
இந்திய சந்தை உட்பட சர்வதேச அளவில் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்ற மாடல் பாக்ஸ் ஸ்டைல் டிசைனை பெற்று முன்பக்கத்தில் செங்குத்தான எல்இடி ரன்னிங் விளக்கு கொண்டதாகவும், உயமான வீல் ஆர்ச் பெற்று விளங்கலாம்.
Syros எஸ்யூவி மாடலில் 6000rpm-ல் 81 hp பவர், மற்றும் 113.8 Nm டார்க் 4000rpm-ல் வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி என இரண்டிலும் கிடைக்கலாம். கூடுதலாக டர்போ பெட்ரோல் என்ஜினும் இடம்பெறலாம். ஆனால் டீசல் என்ஜின் பற்றி உறுதியான தகவல் இல்லை.
இந்திய சந்தைக்கு கேரன்ஸ் இவி மற்றும் சிரோஸ் எலக்ட்ரிக் பவர்டிரெயின் இடம்பெற உள்ள இந்த மாடலின் ரேஞ்ச் 300-500 கிமீ பயணிக்கும் திறனை பெற்றிருக்கலாம்.
2024 ஆம் ஆண்டின் இறுதி மாதங்களில் வெளியிடப்பட்டு 2025 ஆம் ஆண்டின் துவக்க மாதத்தில் விற்பனைக்கு கியா சிரோஸ் விலை ரூ.6.50- 7.00 லட்சத்துக்குள் துவங்கலாம் என எதிர்பார்க்கின்றோம்.