புதிய 2024 மாருதி டிசையர் லிட்டருக்கு 25 கிமீ மைலேஜ் தருமா..!

ஸ்விஃப்ட் மாடல் வெளியானதை தொடர்ந்து அடுத்தது வரவுள்ள 2024 மாருதி டிசையர் பிரபலமான செடான் மாடல் பல்வேறு மாற்றங்கள் ஸ்விஃப்ட் போலவே பெற்றிருக்கும் நிலையில் விற்பனைக்கு அடுத்த மூன்று மாதங்களுக்குள் எதிர்பார்க்கப்படுகின்றது.

சமீபத்தில் வெளியான 2024 சுசூகி ஸ்விஃப்டில்  இடம்பெற்றுள்ள புதிய மூன்று சிலிண்டர் Z12E பெட்ரோல் என்ஜினை டிசையரும் பெற உள்ளது. அடிப்படையாகவே இரண்டும் ஒரே மாதிரியான வசதிகளை பெற்றுக் கொள்ளும் என்பதனால், புதிய செடானிலும் 6 ஏர்பேக்குகள், ESC, மூன்று புள்ளி இருக்கை பெல்ட்டுகள் உட்பட BNCAP கிராஷ் டெஸ்ட் விதிமுறைகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்டிருக்கும்.

முந்தைய K12B 4 சிலிண்டர் 1.2 பெட்ரோல் என்ஜினுக்கு பதிலாக 3 சிலிண்டர் Z12E 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 82 hp மற்றும் 112 என்எம் டார்க் வெளிப்படுத்தும். டிசையருக்கும் 5 வேக மேனுவல் மற்றும் ஏஜிஎஸ் கியர்பாக்ஸ் வழங்கப்படும்.

தற்பொழுது விற்பனையில் உள்ள மாடலை விட சராசரியாக லிட்டருக்கு 2.5 கிமீ வரை கூடுதலாக மைலேஜ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதனால் சுசூகி டிசையர் செடானின் ஏஎம்டி மைலேஜ் 25 கிமீ எட்டுவதற்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக ஏஎம்டி பெற்றுள்ள ஸ்விஃப்ட் மைலேஜ் லிட்டருக்கு 25.72 கிமீ ஆகும்.

தற்பொழுது விற்பனையில் உள்ள 1.2 லிட்டர் K12B டிசையர் மைலேஜ் ஏஎம்டி மாடல் லிட்டருக்கு 22.61 கிமீ மற்றும் மேனுவல் மாடல் லிட்டருக்கு 22.41 கிமீ வரை வழங்குவதாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

swift car

டிசைனில் தொடர்ந்து ஸ்விஃப்ட்டின் அடிப்படை வடிவமைப்பினை பெற்று பின்புறத்தில் கொடுக்கப்படுகின்ற பூட் ஸ்பேஸ் தற்பொழுது உள்ள மாடலை போலவே 378 லிட்டர் கொள்ளளவு கொண்டிருக்கலாம்.

LXi, VXi, VXi (O), ZXi, மற்றும் ZXi+ ஆகிய வகைகளை பெற்று இன்டிரியர் வசதிகளில் டாப் வேரியண்டில் ஃபுளோட்டிங் 9 அங்குல ஸ்மார்ட்புரோ+  இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், சுசூகி கனெக்ட் , மேம்பட்ட ஏசி வசதி, மற்றும் டேஸ்போர்டின் நிறங்களில் மாற்றம் செய்யப்பட்டிருக்கலாம்.

சந்தையில் கிடைத்து வருகின்ற டிசையர் விலை ரூ,6.57 லட்சம் முதல் ரூ.9.39 லட்சம் வரை (எக்ஸ்ஷோரூம் சென்னை) பெட்ரோல் மாடல் கிடைக்கின்றது. எனவே வரவிருக்கும் 2024 மாருதி சுசூகி டிசையர் விலை ரூ.7.10 லட்சம் முதல் துவங்க வாய்ப்புள்ளது. வரும் ஜூலை மாத இறுதி அல்லது ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு கிடைக்க துவங்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.