டெல்லி: டெல்லா கலால் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரி வாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கிய நிலையில், அவர் இன்று மாலை முதல் தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. டெல்லியை ஆட்சி செய்து வரும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி அரசு,. 2021-22-ஆம் ஆண்டுக்கான கலால் கொள்கையை (மதுபானக் கொள்கை) வகுத்ததிலும், நடைமுறைப்படுத்தியதிலும் முறைகேடுகள் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடா்பாக சிபிஐ-யும் அமலாக்கத் […]