சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஹோட்டல் உரிமையாளர்; பொருள்களைச் சேதப்படுத்தி அரிவாளால் மிரட்டிய ரெளடி!

தூத்துக்குடி மாவட்டம், பாஞ்சாலங்குறிச்சியை சேர்ந்தவர் அருணாச்சலம். இவர் கோவில்பட்டி – கடலையூர் நெடுஞ்சாலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே ’ஒத்தக்கடை’  என்ற பெயரில்  கடந்த 15 வருடங்களாக ஹோட்டல் நடத்தி வருகிறார்.  இவரது கடைக்கு  பல்வேறு குற்ற வழக்க்குகள் நிலுவையில் உள்ள அப்பகுதியைச் சேர்ந்த ரெளடி மதன்குமார் என்பவர் அடிக்கடி வந்து சாப்பிட்டுவிட்டுச் செல்வாராம்.

மிரட்டல் விடுத்த ரெளடி மதன்குமார்

கடந்த சில தினங்களுக்கு முன்பு வந்து 700 ரூபாய்க்கு சாப்பிட்டு விட்டு பணம் தராமல் சென்றுள்ளார்.  இந்நிலையில் நேற்று மாலையில் மீண்டும் ஒத்தக்கடை ஹோட்டலுக்கு  மது மற்றும் கஞ்சா போதையில் வந்த ரெளடி மதன்குமார், கடை உரிமையாளரான அருணாச்சலத்தைப்  பார்த்து சொடக்கு போட்டு இரண்டு புரோட்டாவும் ஒரு ஆம்லேட்டும் பார்சல் கேட்டுள்ளார். 

அப்போது அருணாச்சலம், ”பழைய பாக்கி 700 ரூபாயைத் தந்தால் புரோட்டா தர்றேன்”  எனக் கூறியுள்ளார்.  அதற்கு, ”நான் புரோட்டா கேட்டா தர மாட்டியாடா?”  என ஆவேசமாகப் பேசியபடியே அங்கிருந்து சென்ற ரௌடி மதன்குமார், சற்று நேரத்திலேயே திரும்பி வந்து சட்டைக்கு பின்னால் சொருகி வைத்திருந்த அரிவாளை எடுத்து ஹோட்டலில் இருந்த 6 சி.சி.டி.வி கேமராக்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி, கேமரா ஹார்ட் டிஸ்க் கேபிள் வயர்களை அறுத்து எரிந்துள்ளார்.

அரிவாளை எடுக்கும் ரெளடி மதன்குமார்

தொடர்ந்து அங்கிருந்த மேசை, நாற்காலி உள்ளிட்ட பொருட்களையும் அடித்து உடைத்து துவம்சம் செய்து சூறையாடி உள்ளார்.  பின்னர் தலைக்கு மேலே அருவாளை சுற்றிக்கொண்டு ”நான் எப்போ வந்தாலும் புரோட்டா கொடுக்கணும். இல்லைனா நான் உன் தலையை வெட்டி ரோட்டில் வீசிடுவேன்” என அரிவாளைக் காட்டி உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

தொடர்ந்து அவ்வழியாக சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனங்களை மறித்து தகராறு செய்துள்ளார். ரெளடி மதன்குமார் அரிவாளுடன் அட்டகாசம் செய்து வருவதைப் பார்த்த பொதுமக்கள் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். ஹோட்டலுக்கு வந்த போலீஸார்  அரிவாளுடன் நின்று கொண்டிருந்த ரெளவுடி மதன்குமாரை சுற்றி வளைத்துப் பிடித்தனர். 

உடைக்கப்பட்ட சி.சி.டி.வி கேமரா

ஹோட்டல் உரிமையாளர் அருணாச்சலம் கொடுத்த புகாரின் பேரில் மதன்குமார் மீது  கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்த போலீஸார், மதன்குமாரை கைது செய்தனர். ரௌடி மதன்குமார் அரிவாளுடன் ஹோட்டலுக்குள் புகுந்து  சி.சி.டி.வி கேமராக்களை அடித்து உடைத்து அரிவாளைக் காட்டி மிரட்டும் சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வேகமாகப் பகிரப்பட்டு உள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.