2024 மாருதி சுசூகி ஸ்விஃப்ட் மாடலுக்கு பல்வேறு போட்டியாளர்கள் இருந்தாலும் கூட தனது சொந்த மாடல்களே போட்டியாளர்களாக அமைந்திருக்கின்றது. மாருதி சுசூகி நிறுவனத்திடம் உள்ள பலேனோ, வேகன் ஆர் மற்றும் மாருதி தயாரிக்கின்ற டொயோட்டாவின் கிளான்ஸா போன்ற மாடல்கள் சவாலாக உள்ளன.
இந்த தொகுப்பில் நாம் மாருதியின் பலேனோ மற்றும் புதிய 2024 ஆம் ஆண்டிற்கான ஸ்விஃப்ட் என இரு மாடல்களை ஒப்பிட்டு எவ்வாறு இந்த மாடல்களுக்கு உள்ள வித்தியாசம் அமைந்திருக்கின்றது. விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களை எல்லாம் விரிவாக தொடர்ந்து பார்க்கலாம்.
2024 Maruti Swift Vs Baleno
அரேனா ஷோரூம்களில் கிடைக்கின்ற ஸ்விஃப்ட் காரில் அதிக மைலேஜ் வழங்குகின்ற புதிய 3 சிலிண்டர் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு அதிகபட்சமாக 82 hp, 112 Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 5 வேக மேனுவல் மற்றும் ஏஜிஎஸ் எனப்படும் ஏஎம்டி கியர்பாக்ஸ் உள்ளது.
2024 மாருதி சுசூகி ஸ்விஃப்ட் மைலேஜ் 5MT பெற்ற மாடல் 24.80KMPL மற்றும் AGS பெற்ற மாடல் 25.72KMPL ஆகும்.
நெக்ஸா மூலம் விற்பனை செய்யப்படுகின்ற பீரிமியம் ஹேட்ச்பேக் பலேனோ மற்றும் டொயோட்டா கிளான்ஸா காரில் 4 சிலிண்டர் 1.2 லிட்டர் K12 என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்ச பவர் 90hp மற்றும் 113 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 5 வேக மேனுவல் மற்றும் ஏஜிஎஸ் எனப்படும் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.
2024 மாருதி சுசூகி பலேனோ மைலேஜ் 5MT பெற்ற மாடல் 22.35KMPL மற்றும் AGS பெற்ற மாடல் 22.94KMPL ஆகும்.
2024 Maruti Swift | Maruti Baleno | |
என்ஜின் | 1197cc, 3 cyl Z12E | 1197cc, 4 cyl K12 |
பவர் Ps | 81.6 Ps | 89.6 Ps |
டார்க் Nm | 112 Nm | 113Nm |
கியர்பாக்ஸ் | 5MT/AMT | 5MT/AMT |
மைலேஜ் 5MT | 24.80KMPL | 22.35KMPL |
மைலேஜ் AGS | 25.72KMPL | 22.94KMPL |
என்ஜின் மற்றும் மைலேஜ் ஒப்பீட்டளவில் பார்க்கும் பொழுது இரண்டு ஹேட்ச்பேக் ரக மாடல்களும் சிறிய வித்தியாசங்கள் இருந்தாலும் மூன்று சிலிண்டர் என்ஜின் சற்று கூடுதலான அதிர்வுகளை வழங்கும், ஆனால் 4 சிலிண்டர் என்ஜின் சிறப்பான செயல்பாடு மிக்கதாக நல்ல மதிப்பினை பெற்றுள்ளது. அடுத்து, பலேனோ மைலேஜ் லிட்டருக்கு 3 கிமீ வரை குறைவாக உள்ளது.
பலேனோ Vs ஸ்விஃப்ட் மற்ற ஒப்பீடு
பலேனோ 318 லிட்டர் கொள்ளளவு உள்ள பூட்ஸ்பேஸ் பெற்றிருக்கும் நிலையில் மாருதி ஸ்விஃப்ட் 265 லிட்டர் மட்டும் பெற்றுள்ளது. அடுத்து வீல் பேஸ் 70 மிமீ கூடுதலாக பலேனோ பெற்று சற்று தாரளமான இடவசதியை ஸ்விஃப்ட்டை விட கூடுதலாக வழங்குகின்றது.
ஸ்விஃப்டில் 15 அங்குல வீல் பெற்றுள்ள நிலையில் பலேனோ டாப் வேரியண்டில் 16 அங்குல வீல் உள்ளது.
பாதுகாப்பு அம்சங்களில் பலேனோ மாடலை விட ஸ்விஃப்ட் மேம்பட்டு அனைத்து வேரியண்டிலும் 6 ஏர்பேக்குகள், ESC உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது. ஆனால் பலேனோ அடிப்படையாக 2 ஏர்பேக்குகள் பெற்று டாப் ஜெட்டா மற்றும் ஆல்பா வேரியண்டில் மட்டும் உள்ளது.
பொதுவாக இரு மாடல்களும் இன்டிரியரில் 9 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பெற்று சுசூகி கனெக்ட் உள்ளிட்ட வசதிகளை பெற்றுள்ளது.
2024 Swift Vs Baleno Price Comparison
பலேனோ ஆரம்பநிலை மாடலுக்கும் ஸ்விஃப்ட் காருக்கும் உள்ள விலை வித்தியாசம் வெறும் ரூ.17,000 மட்டுமே உள்ளது. பொதுவாக இரு மாடலுக்கு இடையே உள்ள விலை வித்தியாசம் மிக குறைவாகவே உள்ளது.
2024 மாருதி ஸ்விஃப்ட் | மாருதி பலேனோ |
---|---|
5MT கியர்பாக்ஸ் | |
LXi -₹ 6,49,000 | Sigma – ₹ 6,66,000 |
VXi – ₹ 7,29,500 | Delta – ₹ 7,50,000 |
VXI (O) – ₹ 7,56,500 | – |
ZXi – ₹ 8,29,500 | Zeta – ₹ 8,43,000 |
ZXi+ – ₹ 8,99,500 | Alpha – ₹ 9,38,000 |
AGS கியர்பாக்ஸ் | |
VXi AGS – ₹ 7,79,500 | Delta AGS – ₹ 8,00,000 |
VXI (O) AGS – ₹ 8,79,500 | Zeta AGS- ₹ 8,93,000 |
ZXi AGS – ₹ 9,49,500 | – |
ZXi+ DT AGS – ₹ 9,64,500 | Alpha AGS – ₹ 9,88,000 |
(எக்ஸ்ஷோரூம் தமிழ்நாடு)
2024 மாருதி ஸ்விஃப்ட் ஆன் ரோடு விலை ₹ 7.88 லட்சம் ரூ.11.58 லட்சம் வரை உள்ளது.
மாருதி சுசூகி பலேனோ ஆன் ரோடு விலை ₹ 8.11 லட்சம் ரூ.12.10 லட்சம் வரை உள்ளது.
எம்மை பொறுத்தவரை 2024 ஸ்விஃப்ட் மாடலை விட பலேனோ காரை தேர்ந்தெடுப்பது மிகவும் சிறப்பானதாகும். கூடுதலான இடவசதி நான்கு சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின், ப்ரீமியம் தோற்றம் பெற்றுள்ளது. மாருதி சுசூகி பலேனோ தேர்ந்தெடுக்கும் பொழுது மிகவும் கவனமாக டாப் வேரிண்டுகளை தேர்ந்தெடுப்பது நல்லது ஏனென்றால், அந்த மாடல்களில் தான் ஆறு ஏர்பேக்குகள் உள்ளன. மற்றவற்றில் இரண்டு ஏர்பேக்குகள் மட்டுமே உள்ளது.