CSK vs RR: இன்றுடன் ஓய்வை அறிவிக்கும் தல தோனி? சூசகமாக சொன்ன சிஎஸ்கே!

CSK vs RR: இன்று இந்தியன் பிரீமியர் லீக் 2024ல் கடைசி ஹோம் கேமில் சிஎஸ்கே அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் விளையாட உள்ளது. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவர்களது ட்விட்டர் பக்கத்தில் தோனியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது. அதில் தற்போது காலில் ஏற்பட்டுள்ள காயத்தையும் பொருட்படுத்தாமல் விளையாடி வரும் MS தோனிக்கு இதயப்பூர்வமான கேப்ஷனுடன் பகிர்ந்துள்ளது. எம்.எஸ். தோனி காயம் அடைந்திருந்தாலும், உண்மையான தலைவரைப் போல வலியை தாங்கி போராடி வருகிறார் என்று கூறியுள்ளது. “வயது முதிர்ந்த போதிலும்.. வலிகள் மிகுந்த போதிலும்.. வலிமை குறைந்த போதிலும்.. வீரன் வாள் தரிப்பதை நிறுத்துவதில்லை!” என்று குறிப்பிட்டுள்ளது.

வயது முதிர்ந்த போதிலும்..
வலிகள் மிகுந்த போதிலும்..
வலிமை குறைந்த போதிலும்..
வீரன் வாள் தரிப்பதை நிறுத்துவதில்லை!#ThalaForever  @msdhoni pic.twitter.com/382Fge1FLK

— Chennai Super Kings (@ChennaiIPL) May 11, 2024

இன்று நடைபெறும் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோல்வி அடையும் பட்சத்தில் இந்த சீசனின் பிளேஆப்களுக்கு தகுதி பெறாது. அப்படி நடந்தால் தோனி விளையாடும் கடைசி டி20 போட்டியாக இந்த போட்டி மாறும். தோனி தசைப்பிடிப்புடன் இந்த ஆண்டு விளையாடி வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. மேலும் இந்த சீசன் முழுவதும் தோனி முழு உடற்தகுதியுடன் இல்லை. பல நேரங்களில் நொண்டி நொண்டி நடப்பதை நம்மால் பார்க்க முடிந்தது. கடந்த ஆண்டு முதலே முழங்கால் காயத்துடன் தோனி போராடி வருகிறார். சமீபத்தில் முழங்கால் அறுவை சிகிச்சையும் செய்து கொண்டார்.

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் துவங்குவதற்கு முன்பு தோனி சர்வதேச கிரிக்கெட்டில் எப்படி நுழைந்தாரோ அதே தோற்றத்தில் காணப்பட்டார். அதே போல ஹேர் ஸ்டைல், அப்போது பயன்படுத்திய பேட் என அவரது நினைவுகளுடன் விளையாடி வருகிறார். கடைசி இரண்டு ஓவர்கள் மட்டுமே களமிறங்கும் தோனி சிக்சர்களை பறக்கவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். மேலும் யாரும் எதிர்பார்க்காதா விதமாக தனது கேப்டன்சி பதவியை ருத்ராஜிடம் கொடுத்தார். தோனி இந்த சீசனில் இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 226.67 ஸ்ட்ரைக் ரேட்டில் 136 ரன்கள் எடுத்துள்ளார்.

இந்தியன் பிரீமியர் லீக் 2024ல் 12 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் தற்போது சிஎஸ்கே புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. இதே இடத்தில் டெல்லி மற்றும் லக்னோ அணிகள் உள்ளன. மேலும் ஹைதராபாத் அணி அவர்களின் கடைசி இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்றால், மூன்றாவது அணியாக பிளேஆப்களுக்கு தகுதி பெற்று விடுவர். அதன் பிறகு 4வது இடத்திற்கும் கடும் போட்டி இருக்கும். எனவே இன்றைய போட்டியில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியம். தற்போது வரை இந்த சீசனில் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற ஒரே அணி கேகேஆர் மட்டுமே. இன்று ராஜஸ்தான் அணி வெற்றி பெரும் பட்சத்தில் அவர்களும் தகுதி பெற வாய்ப்புள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.