ஹைதராபாத்: தெலங்கானாவின் மகபூப்நகரில் பாஜக பிரச்சார கூட்டம் நேற்று நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற இந்த பிரச்சார கூட்டத்தில் பெருந்திரளானோர் கூடினர்.
அப்போது சக்கர நாற்காலியில் வந்த இரு மாற்றுத் திறனாளி பெண்கள் கூட்டத்தின் நடுவில் சிக்கித் தவிப்பதை பிரதமர் மோடி மேடையில் இருந்து பார்த்தார். உடனே தனது உரையை நிறுத்திய அவர், “மாற்றுத் திறனாளிகள் அவதிப்படக்கூடாது, அவர்களுக்கு இடம்விடுங்கள். அவர்கள் முன்வரிசையில் அமர ஏற்பாடு செய்யுங்கள் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு கண்டிப்புடன் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து ஒரு மாற்றுத் திறனாளி பெண்ணை, ஒருவர் கையில் தூக்கிச் சென்றார். மற்றொரு பெண்ணை நாற்காலியோடு சேர்த்து தூக்கி முன்வரிசைக்கு அழைத்துச் சென்றனர். இருவரும் புன்னகையோடு கையசைத்து பிரதமர் மோடிக்கு நன்றியைத் தெரிவித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.