திறந்த பொருளாதாரத்தை கொண்டு வந்த மார்கரெட் தச்சரை உலகமே பாராட்டிய போதும், ஜே.ஆரை முன்னோக்கி கொண்டு செல்லக்கூட இடமளிக்கவில்லை – அமைச்சர் மனுஷ நாணயக்கார

திறந்த பொருளாதாரத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் மார்கரெட் தச்சரை உலகமே பாராட்டியது. ஆனால் அந்த பொருளாதாரம் ஜே.ஆர். ஜனாதிபதி ஜயவர்தனவால் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அவர் திறந்த பொருளாதாரத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க்க அனுமதிக்கப்படவில்லை” என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நாட்டை உயர் நிலைக்கு கொண்டு செல்வதே அனைவரின் முன் உள்ள சவாலாகவும், அந்த சவாலை முறியடிக்க அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்துள்ளதாகவும், அங்குனுகொலபலஸ்ஸ சிறைச்சாலை விளையாட்டரங்கில் நேற்று  (11) நடைபெற்ற ‘ஜயகமுஸ்ரீலங்கா – ஸ்மார்ட் யூத் கிளப்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் தெரிவித்தார். .

“எங்களுக்கு வேலை இல்லை, தொழில் தொடங்க முடியாது. கஷ்டம். இவைகளைத்தான் நாம் மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறோம் அல்லவா. உண்மையில் நாட்டில் பல வேலைகள் உள்ளன, ஆனால் நாம் அதற்கு ஏற்றதாக இல்லை. தனியார் வேலைகள் பற்றி நாளிதழில் விளம்பரம் வந்தால், அந்த வேலைகளுக்கு தகுதிகள் தேவை என்பதால், அந்த வேலைக்கு செல்ல முடியாது. சுற்றுலாத்துறையை பார்த்தால், எங்களிடம் பணம் இல்லை, அனுபவமும் இல்லை. நமது மனித மூலதனத்தை மேம்படுத்தி  புதிய உலகிற்கு செல்ல வேண்டும்

நாம் சிக்கலில் இருக்கும்போது எப்படி தொடங்குவது? இதை மாற்ற நாம் எங்காவது தொடங்க வேண்டும். ஓராண்டுக்கு முன்பு, நாடாளுமன்றத்தில் 225 பேரும் தேவையில்லை என்று ஒரு பிரபலமான முழக்கம் இருந்தது. கடைசியாக 225 எல்லாம் வேண்டாம் என்று பிரச்சாரம் செய்து பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டோம். அதன்பிறகு பெரும் நெருக்கடியை எதிர்கொண்டு, நாட்டின் பொறுப்பை ஏற்கச் சொன்னபோது பலர் ஏற்கவில்லை.

அந்த சிஸ்டம் பற்றி யாருக்கும் புரியவில்லை. சிஸ்டம் மற்றும் அதை எவ்வாறு உருவாக்குவது என்பது உங்களுக்கு புரியவில்லை என்றால், முன்னேறுவது கடினம். இப்போது நல்ல விமர்சகர்கள் இருக்கிறார்கள். ஆனால் விமர்சிப்பவர்கள் தொழிலாளர்கள் அல்ல. படம் பார்த்து விமர்சனம் எழுதுபவர்கள் பலர் இருக்கிறார்கள் ஆனால் அவர்களால் திரைப்படம் எடுக்க முடியாது. நாம் வேலை செய்ய ஆரம்பிக்க வேண்டும். நாடு பிரச்சினையில் இருந்தபோது எமது ஜனாதிபதி,  ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றுக் கொண்டார் என அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.