CSK vs RR : என்னது Match Fixingஆ? மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சிஎஸ்கே!

CSK vs RR Match : சென்னை-ராஜஸ்தான் அணிகள் மோதிய ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைப்பெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலாவது இன்னிங்ஸ் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு ராஜஸ்தான் அணி, 141 ரன்களை எடுத்தது. எளிதான இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி, 18.2 ஓவர்களில் மேட்சை முடித்து வெற்றி பெற்றது. 

ராஜஸ்தான் vs சென்னை:

ஐபிஎல் போட்டியின் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி, புதிய கேபடன் ருதுராஜ் கைக்வாட் தலைமையில் ஆரம்பத்தில் நல்ல ஆதிக்கத்தை செலுத்தி வந்தது. ஆனால், கடந்த சில போட்டிகள் யாவும் சென்னை அணிக்கு தோல்வியை தர, இனி வரும் ஆட்டங்களில் வென்றால் மட்டுமே ப்ளே-ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது, சென்னை அணி. இதையடுத்து, புள்ளிப்பட்டியிலில் தன்னை விட முன்னனியில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சென்னை அணி எதிர்கொண்டது. 

சஞ்சு சாம்சன், ராஜ்ஸ்தான் அணிக்கு தலைமை தாங்க, சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கைக்வாட் தன் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்ல ஆரம்பம் முதலே முனைப்பு காட்டினார். இவர், இந்த போட்டியுடன் சேர்த்து, மொத்தம் 11 முறை டாஸ் தாேற்றார். டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

சிம்பிள் ஆட்டத்திலும் டென்ஷன்!

முதல் இன்னிங்க்ஸில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, ஆரம்பத்திலேய விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. இறுதியில், இந்த அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்களை எடுத்தது. எளிதான இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி, சரமாரி ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் இடையிடையே விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. இதனால், சிம்பிளாக முடிய வேண்டிய ஆட்டமும் ரசிகர்களுக்கு டென்ஷனை கொடுத்தது. இறுதியில், 18.2 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 145 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. 

மேட்ச் ஃபிக்ஸிங் சர்ச்சை!

சென்னை அணியின் வெற்றியை தொடர்ந்து, இணையத்தில் #CSK, #Anbuden #MSDHONI போன்ற ஹேஷ்டேக்குகள் வைரலானாலும், அதனுடனே சேர்ந்து #MatchFixing என்ற ஹேஷ்டேக்கும் வைரலானது. இதற்கு காரணம், இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வேண்டுமென்றே தோற்றது போல இருந்ததாக சில ரசிகர்களால் சொல்லப்படுகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மென்கள், சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதும், இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இது குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்து வரும் நெட்டிசன்கள், இது மேட்ச் ஃபிக்ஸிங் என்பது தெளிவாக தெரிவதாகவும் மீண்டும் சென்னை அணியை 2 ஆண்டுகள் ஐபிஎல் போட்டிகளில் இருந்து தடை செய்ய வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். 

வரலாறு ரிபீட்?

2013ஆம் ஆண்டு நடைப்பெற்ற ஐபிஎல் போட்டியின் போது, சென்னை அணி ராஜஸ்தான் அணியை எதிர்கொண்டது. அப்போது முதலில் பேட்டிங் ஆடிய சென்னை அணி, 4 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்ததாக சொல்லப்படுகிறது. தற்போது நடைப்பெற்ற ஆட்டத்தில், முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 5 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்துள்ளதாகவும் இது ஸ்க்ரிப்ட் போல தோன்றுவதாகவும் சில ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.