ரஜத் படிதார் அரைசதம்… டெல்லி அணிக்கு 188 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு

பெங்களூரு,

17-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று இன்று இரவு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் 62வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ,பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக விராட் கோலி , பாப் டு பிளசிஸ் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்தில் முகேஷ் குமார் பந்துவீச்சில் டு பிளசிஸ் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் அதிரடியாக விளையாடிய விராட் கோலி 13 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து இஷாந்த் ஷர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து ரஜத் படிதார் , வில் ஜாக்ஸ் இருவரும் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டனர்.அரைசதமடித்த ரஜத் படிதார் 32 பந்துகளில் 52 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.பின்னர் வில் ஜாக்ஸ் 29 பந்துகளில் 41 ரன்களுக்கு வெளியேறினார். தொடர்ந்து வந்த கேமரூன் கிரீன் 32 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு பெங்களூரு அணி 187 ரன்கள் எடுத்தது. டெல்லி சார்பில் கலீல் அகமது , ரசிக் சலாம் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.தொடர்ந்து 188 ரன்கள் இலக்குடன் டெல்லி அணி விளையாடுகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.