கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க-வுடன் கூட்டணியில் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்த ஜேடி(எஸ்) தலைவர் பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக கர்நாடக பா.ஜ.க தலைவர்களுக்கு கூறப்பட்டும், அவர்கள் அதன்மீது நடவடிக்கை எடுக்காமல், பிரதமர் மோடியே பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு வாக்கு சேகரித்தது அரசியல் அரங்கில் பேசுபொருளானது.
இதற்கிடையில், பிரஜ்வல் ரேவண்ணா நாட்டை விட்டு தப்பி செல்ல பா.ஜ.க உதவியதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில், பிரஜ்வால் ரேவண்ணா, அவரின் தந்தை எச்.டி ரேவண்ணா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக சிறப்பு புலனாய்வுக் குழுவின் (SIT) விடம் பெண் ஒருவர் அளித்த புகாரில்,“என் அம்மா எச்.டி.ரேவண்ணா வீட்டில் வேலை செய்துவந்தார். பலமுறை எச்.டி. ரேவண்ணா, பிரஜ்வல் ரேவண்ணா ஆகியோரால் எனது தாயார் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார்.
பிரஜ்வால் ரேவண்ணாவும் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். அவர்களுக்கு ஒத்துழைக்காவிட்டால், கணவரின் வேலையைப் பறிப்பேன், அவரை வேலையில்லாமல் ஆக்கிவிடுவேன், மகளை பாலியல் வன்கொடுமை செய்வேன் என பிரஜ்வல் ரேவண்ணா என் அம்மாவை மிரட்டி வந்தார். என் அம்மா நான்கைந்து மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே வீட்டிற்கு வருவார். மிகவும் துன்புறுத்தப்பட்டிருக்கிறார் என்பதை உணர்ந்துகொள்வோம். நள்ளிரவு 1 அல்லது 2 மணிக்கு மட்டுமே எங்களை அழைத்து பேசுவார். பகலில் எங்களுடன் பேசுவது அரிது. பிரஜ்வல் ரேவண்ணாவும் எனக்கு போன் செய்து எனது ஆடைகளை கழற்றச் சொல்வார்.
அவர் அழைப்பை ஏற்காதபோது என் அம்மாவின் மொபைலில் அழைத்து வீடியோ காலுக்கு பதிலளிக்கும்படி என்னை வற்புறுத்துவார். நான் மறுத்தபோது, அவர் என்னையும் என் அம்மாவையும் தாக்குவதாக மிரட்டுவார். அதைத் தொடர்ந்தே நாங்கள் புகார் அளித்தோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார். தற்போது, எச்.டி.ரேவண்ணாவை மே 14-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. மேலும், பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது குறிப்பிடதக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88