பாடசாலைகளுக்கு முன்பாக பொலிஸாரின் கண்காணிப்புடன் பாடசாலை நேரத்தில் மாணவர்கள் வீதி விதிமுறைகளை பேணுவதற்காக மாணவர்களுக்கான போக்குவரத்து பாதுகாப்பு உபகரணங்கள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் கையளிக்கப்பட்டன.
இதன் போது மாணவர்களின் பாதுகாப்புக் கருதி 30 நாட்களுக்குள் அனைத்து பாடசாலைகளின் முன்பாகவும் வேகத் தடைகளை உடனடியாக அமைக்க அனைத்து வீதி அதிகார சபைகளுக்கும் ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.