ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீரின் ராம்கஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காஞ்சன் நகரின் மசூதியில் ஆசிரியராக வேலை பார்த்தவர் முஹம்மது தாஹிர் (30). இந்த நிலையில், கடந்த மாதம் 27-ம் தேதி முஹம்மது தாஹிர் அவருடைய மாணவர்கள் 6 பேருடன் மசூதியில் உறங்கிக்கொண்டிருந்தபோது, நள்ளிரவு 2 மணியளவில் முகமூடி அணிந்த அடையாளம் தெரியாத மூவர், மசூதிக்குள் நுழைந்து ஆசிரியரைக் கட்டையால் சரமாரியாகத் தாக்கி கொலை செய்ததாகக் கூறப்பட்டது.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை, ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாகப் பேசிய அஜ்மீர் எஸ்.பி தேவேந்திர குமார்,“ அந்தப் பகுதியிலிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த பிறகும் இந்த வழக்கில் எந்த உண்மைகளும் வெளிவரவில்லை. அதைத் தொடர்ந்து, குற்றவாளிகள் குறித்த தகவல்களைத் தெரிவித்த மாணவர்களிடம் விசாரணை தொடர்ந்தோம்.
அப்போதுதான், தாஹிர் மாணவர்கள் சிலரிடம் பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்ததும், அதைத் தொடர்ந்து, மாணவர்கள் திட்டமிட்டு அவரைக் கொலை செய்ததும் நடந்திருக்கிறது. முஹம்மது தாஹிர் கொலை செய்யப்படுவதற்கு முன்பு, அவருக்குக் கொடுத்த உணவில் தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்திருக்கிறார்கள்.
அவர் தூங்கியது, அவரை கட்டையால் அடித்தும், கயிற்றால் கழுத்தை நெரித்தும் கொலை செய்திருக்கிறார்கள். அவர் இறந்ததற்குப் பின்பே, வெளியே வந்து தகவல் கொடுத்திருக்கிறார்கள். இந்த வழக்கு தொடர்பாக அந்த 6 மாணவர்களையும் கைது செய்திருக்கிறோம். மேலும், தகவல்களுக்காக விசாரித்து வருகிறோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88