`அவர் மணந்தது பெண்ணை அல்ல, தேவதையை…’ – 10 ஆண்டு கோமாவிலிருந்து கணவரை மீட்ட பெண்..!

மாரடைப்பு ஏற்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவமனையில் கோமாவில் இருந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த தன் கணவருக்கு நினைவு திரும்பியதையடுத்து, இன்ப அதிர்ச்சி அடைந்த மனைவி, அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அது, காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சீனாவின் அன்ஹுய் மாகாணத்தைச் சேர்ந்தவர் சன் ஹாங்சியா. இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் சுயநினைவை இழந்து கோமாவுக்குச் சென்றுள்ளார்.

family

மிகுந்த மனவேதனை அடைந்த சன் ஹாங்சியாவின் மனைவி ஹாங்சியா, தம் கணவர் மீண்டு வருவார் என்ற உறுதியுடன் அவரை மிகுந்த அக்கறையுடன் கவனித்து வந்துள்ளார்.

இரண்டு குழந்தைகளும் தாய் ஹாங்சியாவுக்கு தொடர்ந்து உதவியுள்ளனர். இந்நிலையில், 10 ஆண்டுக்குப் பிறகு கோமாவிலிருந்த ஹாங்சியாவுக்கு தற்போது நினைவு திரும்பியுள்ளது.

இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்த ஹாங்சியா கூறுகையில், “என் கணவர் 10 வருடங்களாக கோமாவில் இருந்தபோது நான் சந்தித்த உடல்ரீதியான பிரச்னைகள், பணம் மற்றும் மனரீதியான வேதனைகள், சிக்கல்கள் ஏராளம். நான் துயருறும்போதெல்லாம் என் குழந்தைகள்தான் மனவலிமையையும், நம்பிக்கையும் கொடுத்தார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Patient (Representational Image)

கடந்த சில நாள்களுக்கு முன்னர் அவர் கோமாவில் இருந்து மீண்டது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. அந்த வீடியோவில் படுக்கையில் கணவரின் அருகில் ஹாங்சியா அமர்ந்திருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் அனுபவித்த வலிகளைப் பற்றி தன் கணவர் சன் ஹாங்சியாவிடம் கூறியபோது, அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. இதனை பார்த்த இணையவாசிகள் பலரும் ’இதுதான் உண்மையான காதல்’ எனப் பதிவிட்டு வருகின்றனர்.

ஹாங்சியாவின் 88 வயதாகும் மாமனார் கூறும்போது, “அவரை மருமகள் எனச் சொல்வதைவிட மகள் என்றே சொல்லலாம். அவரை யாரோடும் ஒப்பிட முடியாது” என்கிறார். கணவரை மீட்டெடுத்த இப்பெண்ணுக்கு இணையதளத்தில் பலரும் , “அவர் மணந்தது பெண்ணை அல்ல, தேவதையை. காதலின் வலிமை மிகப்பெரிது” என்றும் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.