சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற பைக்குகளில் ரூபாய் 2 லட்சத்துக்குள் கிடைக்கின்ற மாறுபட்ட ஸ்டைல் மற்றும் சிறப்பான வரவேற்பினை பெற்ற சிறந்த ஐந்து பைக்குகளை தொகுத்து வழங்கியுள்ளேன்.
குறிப்பாக 200-500சிசி-க்கு குறைந்த திறன் பெற்ற மாடல்களில் கிளாசிக், ஸ்போர்ட், அட்வென்ச்சர், ஃபேரிங் என மாறுபட்ட பிரிவுகளில் அதிகம் விற்பனை ஆகின்ற சிறந்த மோட்டார்சைக்கிளில் 2 லட்சத்துக்கும் குறைந்த எக்ஸ்ஷோரூம் விலை மற்றும் சிறப்புகள் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலையை அறிந்து கொள்ளலாம்.
எந்த பைக் தேர்வு செய்யலாம்..!
குறிப்பாக ரூ.2 லட்சம் விலைக்குள் என கட்டுரையை துவங்கும் பொழுது ராயல் என்ஃபீல்டின் பெரும்பாலான 350சிசி பைக்குகள் இந்த பட்டியலில் கிளாசிக் 350, ஹண்டர் 350, புல்லட் 350 மற்றும் மீட்டியோர் 350 உள்ளிட்டவை முதலில் வந்தன, இவற்றில் கிளாசிக் மாதந்தோறும் 22,000 யூனிட்டுகளுக்கு மேல் விற்பனை ஆகி வருகின்ற நிலையில் மற்ற மாடல் 12,000 கூடுதலாக விற்பனை ஆகின்றன.
ஸ்போர்ட்டிவ் பிரிவுக்கு கேடிஎம், யமஹா மற்றும் பஜாஜ் பைக்குகளில் உள்ள பல்சர் இடம்பெற்றுள்ளன. அட்வென்ச்சர் ரக பிரிவுக்கு மாறினால் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன், குறைந்த விலை ஹீரோ எக்ஸ்பல்ஸ் இடம்பெற்றுள்ளன. பல்சர் வரிசையில் பஜாஜ் வெளியிட்ட 400சிசி சந்தையில் வெளியிட்ட என்எஸ்400இசட் ரூ.2 லட்சத்துக்கும் குறைந்த விலையில் அமைந்துள்ளது.
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350
ரூ.1.93 லட்சம் முதல் ரூ.2.23 லட்சம் விலையில் (எக்ஸ்ஷோரூம்) துவங்குகின்ற ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக் மாடலில் 349cc, ஒற்றை சிலிண்டர், ஏர் ஆயில் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 6,100rpm-ல் 20.2 Bhp பவரையும் , 4000rpm-ல் 27 Nm டார்க் வெளிப்படுத்தும். இந்த என்ஜினில் 5 வேக கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 35 கிமீ வரை வழங்குகின்றது.
ரெட்ரோ ஸ்டைல் பெற்ற ஜாவா 350, ஹோண்டா CB350 சீரிஸ், டிரையம்ப் ஸ்பீடு 400, ஹார்லி-டேவிட்சன் x440, ஹீரோ மேவ்ரிக் 440, டிவிஎஸ் ரோனின் உள்ளிட்ட பல்வேறு மாடல்கள் கிடைத்து வரும் நிலையில் கிளாசிக் 350 தொடர்ந்து இந்தியர்களின் சிறந்த மோட்டார்சைக்கிள் மாடலாக விளங்குகின்றது.
2024 ராயல் என்ஃபீல்டின் கிளாசிக் 350 பைக்கின் ஆன்ரோடு விலை ரூ.2.28 லட்சம் முதல் ரூ.2.64 லட்சம் ஆகும்.
கேடிஎம் 200 டியூக்
ஸ்போர்ட்டிவ் ஸ்டைலை பெற்றுள்ள கேடிஎம் நிறுவனத்தின் டியூக் 200 பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 199.5சிசி லிக்யூடு கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 24.67 hp மற்றும் 19.3 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது. இந்த மாடலின் மைலேஜ் லிட்டருக்கு 30-32 கிமீ வரை கிடைக்கலாம்.
ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் பெற்று பல்சர் NS200, யமஹா MT-15 V2, சுசூகி ஜிக்ஸர், ஹோண்டா CB300R, டிவிஎஸ் அப்பாச்சி RTR200 4V உள்ளிட்ட பல்வேறு மாடல்களை எதிர்கொள்ளுகின்றது.
2024 கேடிஎம் 200 டியூக் பைக்கின் ஆன்ரோடு விலை ரூ.2.39 லட்சம் ஆகும்.
யமஹா R15 V4
இந்தியாவின் ஃபேரிங் ஸ்டைல் பெற்ற சிறந்த ஸ்போர்ட்டிவ் ரக மாடலாக விளங்கும் யமஹா R15 V4 , R15S, R15M பைக்கில் 155cc, லிக்யூடு கூல்டு SOHC நான்கு வால்வு, சிங்கிள் சிலிண்டர் VVA பெற்ற என்ஜின் 10000rpm-ல் 18.1 bhp பவர் மற்றும் 7,500rpm-ல் 14.2Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் சிலிப்பர் அசிஸ்ட் உடன் கூடிய 6 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.
ஃபேரிங் ஸ்டைல் பெற்ற மற்ற மாடல்களில் கேடிஎம் ஆர்சி200, சுசூகி ஜிக்ஸர் SF 250, பஜாஜ் பல்சர் RS200 உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ளுகின்றது.
2024 யமஹா R15 V4 பைக்கின் ஆன்ரோடு விலை ரூ.2.01 லட்சம் முதல் ரூ.2.43 ஆகும்.
ஹீரோ எக்ஸ்பல்ஸ்
சந்தையில் கிடைக்கின்ற குறைந்த விலை அட்வென்ச்சர் ரக ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4வி மாடலில் ஆயில் கூல்டு 199.6cc, 4 வால்வுகளை கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு அதிகபட்சமாக 18.8 bhp பவர் 8,500rpm-லும் மற்றும் 17.35 Nm டார்க் 6,500rpm-லும் வழங்குகின்றது.
அட்வென்ச்சர் ஸ்டைல் பைக்கில் சுசூகி V-strom SX, ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ளுகின்றது.
2024 ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக்கின் ஆன்ரோடு விலை ரூ.1.82 லட்சம் முதல் ரூ.1.91 ஆகும்.
பஜாஜ் பல்சர் NS400Z
பட்ஜெட் விலையில் அமைந்துள்ள பல்சர் NS400Z பைக்கில் 373cc லிக்யூடு கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 40Ps பவர் மற்றும் டார்க் 35 Nm வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் உள்ளது.
ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் பல்சர் என்எஸ்400இசட் ஆன்ரோடு விலை ரூ.2.28 லட்சம் ஆக உள்ளது. இந்த மாடலுக்கு சவாலாக 200-400சிசி முதல் பல்வேறு ஸ்போர்ட்டிவ் மாடல்களுக்கு சவாலாக விளங்குகின்றது.