இந்தியப் பங்குச் சந்தை தொடர்ந்து சரிந்துகொண்டே வருகிறது. கடந்த வாரம் இந்தியப் பங்குச் சந்தை கிட்டத்தட்ட 2 சதவிகிதம் சரிந்துவிட்டது. இன்றும் பங்குச் சந்தை 1% வரை சரிந்தது. சர்வதேச பங்குச் சந்தைகள் பெரிய சரிவுகளை சந்திக்காத போதிலும், இந்தியப் பங்குச் சந்தை இறங்கிக்கொண்டே வருகிறது.
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கப்போகிறது என்ற அச்சம் முதலீட்டாளர்களுக்கும் இருப்பதால் இந்திய சந்தை சரிவடைந்து வருகிறது. மே 3-ம் தேதி பங்குச் சந்தை புதிய உச்சம் தொட்டது. அந்த உச்சத்தில் இருந்து 4 சதவிகிதத்துக்கு மேல் இறங்கிவிட்டது.
தேர்தல் முடிவுகள் வரும் வரை இதேபோல பங்குச் சந்தை சரிவை சந்திக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில், ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு பங்குச் சந்தை உயரப்போகிறது என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து என்.டி.டி.வி ஊடகத்துக்கு அமித்ஷா அளித்த பேட்டியில், “இதற்கு முன்பும் பங்குச் சந்தை அதிகளவில் இறங்கியுள்ளது. எனவே, பங்குச் சந்தை நகர்வுகளை நேரடியாக தேர்தலுடன் இணைப்பது சரியல்ல. சில வதந்திகளால் கூட பங்குச் சந்தை இறங்கியிருக்கலாம். ஜூன் 4-ம் தேதிக்குள் பங்குகளை வாங்கிவிடுங்கள். அதன்பின் பங்குச் சந்தை எகிறப்போகிறது.
ஒரு நிலையான அரசு இருக்கும்போது பங்குச் சந்தைகள் சிறப்பாக உயரும். பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வரப்போகிறார். இதுதான் என் கணிப்பு. முதல் மூன்று கட்ட வாக்குப்பதிவில் பா.ஜ.க 190 இடங்களுக்கு மேல் கைப்பற்றும். நான்காம் கட்ட தேர்தலும் எங்களுக்கு சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா பல்வேறு பங்குகளில் முதலீடு செய்திருக்கிறார். அவர் தாக்கல் செய்த தேர்தல் பிரமாணப் பத்திரத்தின்படி, மொத்தம் 181 பங்குகளில் முதலீடு செய்துள்ளார். அவரது போர்ட்ஃபோலியோ மதிப்பு 17.4 கோடி ரூபாய். இந்துஸ்தான் யுனிலீவர், எம்.ஆர்.எஃப், கோல்கேட் பால்மோலிவ், புராக்டர் & கேம்பிள் ஹைஜீன், ஏ.பி.பி இந்தியா, ஐ.டி.சி, வி.ஐ.பி இண்டஸ்ட்ரீஸ், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பங்குகளில் அவர் முதலீடு செய்திருக்கிறார்.
இத்தனை நாளும் அரசியல் காய்களை நகர்த்திய அமீத்ஷா, இப்போது பங்குச் சந்தையிலும் காய்களை நகர்த்த ஆரம்பித்துவிட்டார்!
Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume-based parameters
Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exists no conflict of interest that can bias his views in this report. The Analyst does not hold any share(s) in the company/ies discussed.
General Disclaimer and Terms & Conditions of the research report
INVESTMENT IN SECURITIES MARKET ARE SUBJECT TO MARKET RISKS. READ ALL THE RELATED DOCUMENTS CAREFULLY BEFORE INVESTING. Registration granted by SEBI and certification from NISM in no way guarantee performance of the intermediary or provide any assurance of returns to investors. For a detailed disclaimer and disclosure please visit https://www.vikatan.com/business/share-market/113898-disclaimer-disclosures. Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances.
One year Price history of the daily closing price of the securities covered in this section is available at https://www.nseindia.com/report-detail/eq_security (Choose the respective symbol) /name of company/time duration)
முதலீடு செய்வதற்குமுன், செபி பதிவு பெற்ற இன்வெஸ்ட்மென்ட் அட்வைசரிடம் கலந்தாலோசிக்க முதலீட்டு முடிவை எடுக்க வேண்டும். சரியான வாய்ப்புகளுக்காகக் காத்திருந்து அந்த வாய்ப்புகள் கிடைக்கும்போது குறைந்த எண்ணிக்கையில் வாங்குவது லாபகரமாக இருக்கும்.