ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஹிமாலயன் 450 பைக்கின் பிளாட்ஃபாரத்தில் கொரில்லா 450 தயாரிக்கப்பட்டு வரும் நிலையில் சமீபத்திய சாலை சோதனை ஓட்ட படங்கள் மூலம் உற்பத்தி நிலையை எட்டியுள்ளதால் அடுத்த சில வாரங்களுக்குள் விற்பனைக்கு வெளியிடப்படுவது குறித்தான முக்கிய அறிவிப்பு வெளியாகலாம்.
ஹிமாலயன் 450 பைக்கின் அடிப்படையாக கொண்டு நியோ ரோட்ஸ்டெர் ஸ்டைலை பெறுகின்ற கொரில்லா450 பைக்கில் 452cc ஒற்றை சிலிண்டருடன் 4 வால்வுகளுடன் கூடிய DOHC லிக்யூடு கூல்டு என்ஜின் ஆனது அதிகபட்சமாக 40 bhp பவர் மற்றும் 40 Nm டார்க் வெளிப்படும் நிலையில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் பெற்றிருக்கும்.
ஹிமாலயனில் உள்ள பல்வேறு உதிரிபாகங்களை பகிர்ந்து கொண்டாலும் அடிப்படையாக இரு மாடல்களுக்கு வித்தியாசத்தை வழங்கும் வகையில் பெட்ரோல் டேங்க், முன்புறத்தில் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷனை பெற்று இரு பக்க டயரிலும் 17 அங்குல வீல் பெற்றிருக்கின்றது.
புதிய 4 இன்ச் வண்ண TFT கிளஸ்ட்டர் பெறுமா அல்லது ஷாட்கன் பைக்கில் இடம்பெற்றுள்ள எல்சிடி கிளஸ்ட்டர் பெறுமா என்பது குறித்து தெளிவான எந்த தகவலும் இல்லை.
வரும் வாரங்களில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பாரக்கப்படுகின்ற நிலையில் ராயல் என்ஃபீல்டின் கொரில்லா 450 பைக்கின் விலை ரூ.2.30 லட்சத்தில் துவங்க வாய்ப்புள்ளது. டிரையம்ப் ஸ்பீடு 400, ஹோண்டா CB300R உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ளும்.