சென்னை தமிழக பாஜக டலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி அளிக்கவில்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியதை கண்டித்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பா.ஜ.க. சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் பேசிய பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, அண்ணா குறித்து சர்ச்சையாக பேசியதாக கூறப்படுகிறது. தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. தரப்பில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சேலத்தை சேர்ந்த சுற்றுச்சூழல் […]