நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கிய தேர்தல் ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமன்றி, முன்னனி நடிகர்களும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் யார் யார் என்பதைப் பார்ப்போம்.
* பா.ஜ.க சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் நடிகை ராதிகா சரத்குமார் தனது கணவர் சரத்குமார் உடன் சேர்ந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
*மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன் விருதுநகர் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. வேட்பாளராக போட்டியிட்டு பரப்புரை மேற்கொண்டார்.
* இமாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க வேட்பாளராக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஜூன் 1 ஆம் தேதி இமாச்சலப் பிரதேசத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தீவிர பிரச்சாரத்தில் கங்கனா ஈடுபட்டு வருகிறார்.
* திருச்சூர் தொகுதியில் போட்டியிட நடிகர் சுரேஷ்கோபிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. காங்கிரசின் மூத்த தலைவரான முரளீதரன் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு பிரமுகர் சுனில்குமார் ஆகியோரை எதிர்த்து போட்டியிட்ட அவர் நடனமெல்லாம் ஆடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக நடிகை ரோகிணியும் பரப்புரை செய்தார். தமிழகத்திலும் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
* ஷிவமொக்கா தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக பிரபல நடிகர் சிவராஜ் குமாரின் மனைவி கீதா வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார். தனது மனைவி கீதாவை ஆதரித்து சிவராஜ் குமார் தமிழில் பரப்புரையை மேற்கொண்டிருந்தார்.
* தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளராக களமிறங்கிய பாலகிருஷ்ணாவும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
* ஆந்திரப் பிரதேசம் நந்தியாலாவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரும் நண்பருமான ரவீந்திர கிஷோர் ரெட்டிக்கு ஆதரவாக நடிகர் அல்லு அர்ஜூன் பிரச்சாரம் செய்தார்.
* மறுபுறம் பவன் கல்யாணை ஆதரித்து அவரின் உறவினராக நடிகர் ராம் சரண் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். காக்கிநாடா மாவட்டம் பித்தாபுரம் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் ஜனசேனா கட்சித் தலைவரும், நடிகருமான பவன் கல்யாணை ஆதரித்து, அவரின் அண்ணன் மகனான நடிகர் ராம்சரண் பிரசாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.