மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்சினைகள், தற்பொழுது காணப்படும் வாய்ப்புக்கள் மற்றும் அவற்றை உரிய முறையில் நிவர்த்தி செய்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் முன்மொழிவுகள் குறித்து கலந்துரையாடுவதற்கான விசேட செயலமர்வு இன்று(13) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
குறித்த செயலமர்வு, மாற்றுத்திறனாளிகளுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகளின் பிரச்சினைகளுக்கான முன்மொழிவுகளைப் பெற்றுக் கொள்ளும் வேலைத்திட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைமையில் மாத்தறை மாவட்டத்தில் முதலாவதாக ஆரம்பிக்கப்பட்டது.
தொடர்ந்து இரண்டாவதாக கிளிநொச்சி மாவட்டத்தில் இன்றைய தினம் நடைபெற்றது.
இதன்போது நாட்டின் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் சமூகத்தில் மாற்றுத்திறனாளுக்கான ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கான பொறிமுறையை நிறுவுவதற்குத் தேவையான தகவல்களும் முன்மொழிவுகளும் சேகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.