தமிழ்நாட்டில் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றதன் மூலம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தி.மு.க ஆட்சியமைத்தது. அதைத் தொடர்ந்து, முதன்முறையாக முதல்வராகப் பொறுப்பேற்ற ஸ்டாலின் தலைமையில் செயல்படத் தொடங்கிய தி.மு.க அரசு, கடந்த மே 7-ம் தேதியோடு மூன்றாண்டுகால ஆட்சியை நிறைவுசெய்து நான்காம் ஆண்டில் அடியெடுத்துவைத்தது.
முதல்வர் ஸ்டாலின்கூட, `மூன்றாண்டுகளில் என்ன செய்தேன் என்பதற்கு, மக்களின் புன்னகையே சாட்சி’ என்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதேசமயம், ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க ஆட்சி குறித்து கலவையான விமர்சனங்களும் வந்தன.
அதனால், தி.மு.க-வின் கடந்த மூன்றாண்டுகால ஆட்சி குறித்து விகடன் வலைதளப்பக்கத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில், `முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க ஆட்சியில் மூன்றாண்டுகால செயல்பாடு எப்படி இருந்தது?’ என்று கேள்வி கொடுக்கப்பட்டு, `சிறப்பு, பரவாயில்லை, மோசம்’ என மூன்று விருப்பங்களும் தரப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி அதிகபட்சமாக, `41 சதவிகிதம் பேர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க ஆட்சியில் மூன்றாண்டுகால செயல்பாடு மோசம்’ என்று தெரிவித்திருக்கின்றனர். அதற்கடுத்தபடியாக, 30 சதவிகிதம் பேர் சிறப்பு என்றும், 29 சதவிகிதம் பேர் பரவாயில்லை என்றும் தெரிவித்திருக்கின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb