டிவிஎஸ் மோட்டாரின் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ரூபாய் 1.08 லட்சம் முதல் ரூபாய் 1.86 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டு தற்பொழுது ஐந்து விதமான வேரியண்டுகளில் விற்பனைக்கு கிடைக்க துவங்கியுள்ளது.
புதிதாக 2.2kwh பேட்டரி, முந்தைய 3.4kwh பேட்டரி மற்றும் டாப் ST வேரியண்டில் 5.1 kwh பேட்டரி என மூன்று விதமான ஆப்ஷனில் ஐக்யூப் 09, ஐக்யூப் 12, ஐக்யூப் S, ஐக்யூப் ST 12, மற்றும் ஐக்யூப் ST 17 என 5 விதமான வேரியண்டுகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டருக்கு பொதுவாக 950W சார்ஜர் வழங்கப்படுகின்றது.
2.2kwh பேட்டரி பெறுகின்ற துவக்க நிலை ஐக்யூப் 09 வேரியண்டில் முழுமையான சிங்கிள் சார்ஜில் 75 கிமீ பயணிக்கலாம். இதன் சார்ஜிங் நேரம் 0- 80 % பெற 2 மணி நேரம் மட்டுமே எடுத்துக் கொள்ளும்.
3.4kwh பேட்டரியை பெறுகின்ற ஐக்யூப் 12, ஐக்யூப் S, மற்றும் ஐக்யூப் ST 12 என்ற மூன்று வேரியண்டுகளும் ஒருசில கனெக்ட்டிவ் வசதிகளை பெறுவதில் மாறுபடுகின்றது. மற்றபடி, பவர் மற்றும் ரேஞ்ச் ஒரே மாதிரியாக அமைந்து சிங்கிள் சார்ஜில் 100 கிமீ பயணிக்கலாம். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 78 கிமீ, சார்ஜிங் நேரம் 0- 80 % பெற 4 மணி நேரம் 30 நிமிடங்கள் (ஐக்யூப் ST 12 மட்டும் 3 மணி நேரம்) மட்டுமே எடுத்துக் கொள்ளும்.
புதிதாக வந்துள்ள ஐக்யூப் ST 17 டாப் வேரியண்டில் 5.1kwh பேட்டரி பொருத்தப்பட்டு சிங்கிள் சார்ஜில் 150 கிமீ பயணிக்கலாம். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 82 கிமீ, சார்ஜிங் நேரம் 0- 80 % பெற 4 மணி நேரம் 18 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளும்.
ST வேரியண்டில் 7 இன்ச் தொடுதிரை TFT டிஜிட்டல் கிளஸ்ட்டரில் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி உட்பட டர்ன் பை டர்ன் நேவிகேஷன், அலெக்சா குரல் உதவி, டிஜிட்டல் ஆவண சேமிப்பு உட்பட 118 கனெக்ட்டிவ் வசதிகளை பெற்றுள்ளது. கூடுதலாக டயர் பிரஷர் கண்காணிப்பு அமைப்புடன் வருகிறது.
TVS iQube Price list
- iqube 09 (2.2Kwh) – ₹ 1,08,042
- iqube 12 (3.4Kwh) – ₹ 1,37,363
- iqube S (3.4Kwh) – ₹ 1,47,155
- iqube ST 12 (3.4Kwh) – ₹ 1,56,290
- iqube ST 17 (5.1Kwh) – ₹ 1,86,108
(All price ex-showroom Tamil nadu)
தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள அறிமுக சலுகை விலை ஜூன் 30 வரை மட்டுமே பொருந்தும். மேலும், ஜூலை 15, 2022க்கு முன்பாக ST வேரியண்டை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் 5.1 kWh அல்லது 3.4 kWh வேரியண்ட்டை வாங்கும் பொழுது ரூ.10,000 வரை தள்ளுபடி லாயல்டி போனஸ் வழங்கப்படும் என டிவிஎஸ் மோட்டார் தெரிவித்துள்ளது.