மன்னார் மாவட்ட செயலக வளாகத்தில் அமைந்துள்ள கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் மன்னார் அலுவலகம், வன்னி மாவட்ட மண் அறக்கட்டளை அமைப்பின் அனுசரணையுடன் பருவ கால நுங்குத் திருவிழா (10) மாவட்ட உள்ளூர் உற்பத்தியாளர்களின் விற்பனை நிலையத்தில் நடைபெற்றது.
இதன்போது நுங்கு திருவிழாவில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மன்னார் மாவட்ட மக்கள் என பலரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு சுடும் வெயிலிலும் வெப்பத்திலும் நுங்குகளை உடனுக்குடன் வெட்டி அருந்தி தாகம் கலைத்தனர்.
இதுவரை செயற்கை மாற்றம் செய்யப்படாத மரங்களுள் ஒன்றான பனை மர, பனம் பழத்தின் இளையதான நுங்கு தற்போதைய வெப்ப நிலைப் பருவத்தில் நாட்டில் பனை பொதுவாக விளையும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் சகல வீதிகளிலும் நுங்கு விற்பனை பரவலாக இடம்பெற்று வருகின்றது.
இதன்படி இந்நுங்குத் திருவிழா பனை மரத்தின் தேவை குறித்தும் மரத்தினால் பெறப்படக் கூடிய பயன்கள் தொடர்பாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.