ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோவாகப் பதிவுசெய்து உறவினருக்கு அனுப்பிய இளைஞரை, போலீஸார் கைதுசெய்தனர். இந்தச் சம்பவம் குறித்து போலீஸிடம் பேசினோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர், நர்சாக வேலை பார்த்து வருகிறார். இவரின் சகோதரிக்கு திருமணமாகி ராஜபாளையம் தாலுகாவில் வசித்து வருகிறார். இந்நிலையில் இளம்பெண்ணின், சகோதரியின் பிள்ளைக்கு உடல் நலம் சரியில்லாமல் போனதாக கூறப்படுகிறது. எனவே, சகோதரியின் பிள்ளைக்கு தேவையான மருத்துவ உதவிகளை உடனிருந்து கவனித்துக் கொள்வதற்காக, இளம்பெண் ராஜபாளையம் தாலுகாவில் உள்ள சகோதரியின் வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மலைக்கனி என்ற இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் செல்போனில் பேசி வந்த மலைக்கனியும், இளம்பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது காதலியான இளம்பெண்ணை, அவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்குவைத்து இளம்பெண்ணுக்கு மயக்கம் மருந்து கலந்த குளிர்பானத்தை வலுக்கட்டாயமாக குடிக்க கொடுத்துள்ளார். இதை அறியாமல் வாங்கி குடித்த இளம்பெண்ணும் சிறிது நேரத்தில் தலை சுற்றுவதாக கூறி அங்கேயே மயங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து பார்க்கையில் இளம்பெண்ணின் ஆடைகள் களையப்பட்டு அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது அவருக்கு தெரியவந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண், காதலரான மலைக்கனியிடம் இதுகுறித்து கேட்டிருக்கிறார். அப்போது பேசிய மலைக்கனி, ‘நீ மயக்கமடைந்த நிலையில் இருந்தபோது, இருவரும் நெருக்கமாக இருந்ததை வீடியோ பதிவு செய்திருக்கிறேன். நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போகிறோம் என்ற உரிமையில் இப்படி செய்தேன்’ எனக் கூறி சமாதானப்படுத்தியுள்ளார். அடுத்த சில நாள்களிலேயே, இந்த வீடியோவை இளம்பெண்ணின் உறவுக்கார இளைஞருக்கு செல்போன் மூலமாக மலைக்கனி அனுப்பிவைத்திருக்கிறார். இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்கவும்… தான் மோசம் செய்யப்பட்டதை உணர்ந்த இளம்பெண், காதல் விவகாரம் குறித்தும் தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அதை மலைக்கனி வீடியோ பதிவு செய்திருப்பது குறித்தும் உறவினர்களிடம் கூறி அழுதிருக்கிறார்.
இதையடுத்து இளம்பெண்ணின் உறவினர்கள் மலைக்கனியை சந்தித்து நியாயம் கேட்டுள்ளனர். ஆனால் மலைக்கனி, இளம்பெண்ணின் உறவினர்களை தகாத வார்த்தைகளால் பேசியதோடு, அவர்களுக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. எனவே, இந்த விவகாரம் தொடர்பாக ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளம்பெண்ணின் உறவினர்கள் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மலைக்கனியை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb