மகளிர் இலவச பேருந்து: `பாலின வேறுபாட்டுக்கு வழிவகுக்கும்!’ – L&T மெட்ரோ நிறுவன இயக்குநர் விமர்சனம்

தமிழ்நாடு, டெல்லி, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து சேவை வழங்கப்பட்டு வருகிறது. வேலைக்கு செல்லும் மகளிருக்கு இந்த திட்டம் பெரும் பயனுள்ளதாக இருப்பதால், மகளிர் மத்தியில் இந்த திட்டத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. மகளிர் நலனை கருத்தில் கொண்டு பெண்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், ஹைதரபாத் மெட்ரோ ரயில் திட்டத்தின் 90 சதவிகித பங்குகளை வைத்திருக்கும் எல்&டி நிறுவனம், மெட்ரோ சிஸ்டத்தை 65 ஆண்டுகள் இயக்க ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால், தற்போது 2026-க்கு பிறகு இந்த திட்டத்தை விற்பதற்கு பரிசீலிப்பதாகக் தெரிவித்திருக்கிறது.

மெட்ரோ

இது குறித்து எல்&டி நிறுவன இயக்குநர் ஷங்கர் ராமன் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில்,“காங்கிரஸ் அரசின் இலவசப் பேருந்து பயணத் திட்டம் நிலையானதல்ல. அரசியல் வாக்குறுதிகளின் பின்னணியில் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும், இது மாநில நிதி உயர்வுக்கு உதவப் போவதில்லை. மாநில போக்குவரத்துக் கழகத்தை திவாலாக்குவதில் என்ன பயன்… இது வேடிக்கையான நடவடிக்கையல்ல.

மெட்ரோ ரயில் போன்ற சூழலை மாசுபடுத்தாத போக்குவரத்து அமைப்பை உருவாக்க தனியார் மூலதனம் பயன்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில், மாசுபடுத்தும் பேருந்துகளை மக்கள் பயன்படுத்துவதற்கு மாநில அரசு பணம் செலவழிக்கிறது. காங்கிரஸ் அரசின் பெண்களுக்கான நலத்திட்டம் சிறப்பாக இருந்தாலும், ஹைதராபாத் போன்ற ஒரு பெரிய நகரம் மாசு ஏற்படுத்தும் பேருந்துகளை நம்புவது ஆரோக்கியமானதல்ல. பெண்களுக்கு மட்டும் இலவச பேருந்து திட்டம் பொது போக்குவரத்தில் பாலின வேறுபாட்டுக்கு வழிவகுக்கிறது.

எல்&டி நிறுவன இயக்குனர் ஷங்கர் ராமன்

பெண்கள் பேருந்துகளை இலவசமாகப் பயன்படுத்துகிறார்கள். அதனால் பெண்களின் கூட்டம் பேருந்துகளில் அதிகரிக்கிறது. அதனால் ஆண்கள் பயணத்திற்கு சராசரியாக ரூ.35 செலுத்துகிறார்கள். தற்போது தினமும் சுமார் 4.8 லட்சம் பேர் மெட்ரோவை பயன்படுத்துகின்றனர். பெண் பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. எனவே, தற்போதைய ரைடர்ஷிப் காரணமாக இந்த திட்டத்தின் கடன் சுமையை குறைக்க வேண்டும். அதற்காகவே 2026-ல் இதை விற்பதற்காக பரிசீலிக்கிறோம்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

தெலங்கானா இலவச பேருந்து பயணத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பே, அதாவது ஜூன் 2021-ல், L&T மெட்ரோ ரயில் அதிகாரிகள் நிதி உதவி கோரி அப்போதைய முதல்வர் கே.சந்திரசேகர் ராவைச் சந்தித்தனர். காங்கிரஸுக்கு முந்தைய பி.ஆர்.எஸ் அரசிடம் சமர்ப்பித்த விவரங்களின்படி, அந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் மட்டும் நிறுவனம் ரூ.400 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக பதிவு செய்திருந்தது.

மெட்ரோ

மேலும், மெட்ரோ ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்காதது, பீக் ஹவர்ஸில் நெரிசலைக் கையாளாதது, மெட்ரோவை நீட்டிக்கத் தவறியது போன்ற சரியான திட்டமிடல் இல்லாததே பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததாகவும், ஹைதராபாத் மெட்ரோ திட்டத்தின் மோசமான திட்டமிடலுக்காக எல்&டியை பலர் விமர்சித்ததும் குறிப்பிடதக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.