ஐபிஎல்லில் இருந்து வெளியேறியுள்ள வீரர்கள்! எந்த எந்த அணிகளுக்கு பாதிப்பு?

டி20 உலகக் கோப்பை 2024க்கு முன்னதாக, இந்தியன் பிரீமியர் லீக்கில் இருந்து பல வெளிநாட்டு வீரர்கள் தங்கள் தேசிய அணியில் சேர தங்கள் நாட்டிற்கு திரும்பி உள்ளனர். இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024ன் லீக் போட்டிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து உள்ளது. கடந்த மார்ச் 22ம் தேதி சென்னையில் தொடங்கிய ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளுக்கும் இன்னும் ஒன்று அல்லது இரண்டு போட்டிகள் மட்டுமே மீதமுள்ள நிலையில் கொல்கத்தா அணி மட்டுமே தற்போது பிளேஆப்களுக்கு தகுதி பெற்றுள்ளது. குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றை விட்டு வெளியேறி உள்ளன. 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கிட்டத்தட்ட பிளே வாய்ப்பை எட்டி உள்ளது. மீதமுள்ள இடங்களுக்கு ஹைதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், லக்னோ ஆகிய அணிகள் போட்டி போட்டு வருகின்றன. பிளே ஆப் போட்டிகள் தொடங்க இன்னும் எட்டு லீக் போட்டிகள் மட்டுமே மீதம் உள்ளன. இந்நிலையில், இந்த முக்கியமான நேரத்தில் டி20 உலகக் கோப்பையில் கலந்து கொள்ள பல வெளிநாட்டு வீரர்கள் தங்கள் நாட்டிற்கு புறப்பட்டுள்ளனர். சில வீரர்கள் முன்கூட்டியே வெளியேறி இருந்தாலும், தற்போது பல அணிகளில் இருந்து முக்கியமான வீரர்களும் வெளியேறியுள்ளனர். இதனால் பிளே ஆப்க்கு தகுதி பெற போராடும் அணிகளின் நிலைமை மோசமாகி உள்ளது.  

ஐபிஎல் 2024ஐ விட்டு வெளியேறும் வீரர்கள்

வில் ஜாக்ஸ்

2024 டி20 உலகக் கோப்பைக்கு முன், பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டி20ஐ தொடர் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள இங்கிலாந்து வீரர் வில் ஜாக்ஸ் ஆர்சிபி அணியில் இருந்து வெளியேறியுள்ளார். வில் ஜாக்ஸ் ஆர்சிபி அணியில் முக்கிய வீரராக இருந்து வருகிறது.  இந்த வருடம் எட்டு போட்டிகளில் விளையாடி 175.57 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 230 ரன்கள் எடுத்துள்ளார். இவரது விலகல் ஆர்சிபி அணிக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஆர்சிபி அணியில் உள்ள மற்றொரு இங்கிலாந்து வீரர் ரீஸ் டோப்லியும் சொந்த நாட்டிற்கு திரும்பி உள்ளார்.

ஜோஸ் பட்லர்

ராஜஸ்தான் ராயல்ஸ் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றாலும், பைனலுக்கு முன்னேறி அவர்களின் அனுபவம் வாய்ந்த வீரர் ஜோஸ் பட்லர் முக்கியம். பல போட்டிகளை தனி ஒரு வீரராக இருந்து முடித்து கொடுத்துள்ளார். இந்நிலையில், இங்கிலாந்து அணியின் கேப்டனான ஜோஸ் பட்லர் பாகிஸ்தான் தொடருக்காக இங்கிலாந்து புறப்பட்டு சென்றுள்ளார். 

மொயின் அலி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலி இங்கிலாந்து திரும்பி உள்ளார். சென்னை அணிக்கு மிடில் ஆர்டரில் பக்கபலமாக இருந்து வந்த அலி டி20 உலக கோப்பையில் இடம் பெற்றுள்ளார். மேலும் பாகிஸ்தான் தொடருக்காக தற்போது நாட்டிற்கு திரும்பி உள்ளார். இவரை தவிர சென்னை அணியில் இருந்து ஏற்கனவே பத்திரனா, முஸ்தபிசூர் ரகுமான் ஆகியோரும் தங்கள் நாட்டிற்கு திரும்பி உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.