கோவை: கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மோசமான வானிலை நிலவியதால், துபாயிலிருந்து வந்து இரண்டு விமானங்கள் கோவை விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டன.
சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தின் தலைநகரமான தம்மாம் மற்றும் துபாயிலிருந்து இரண்டு விமானங்கள் காலை கேரள மாநிலம் கோழிக்கோடுக்கு சென்று கொண்டிருந்தன. மழை மற்றும் மோசமான வானிலை நிலவிய காரணத்தால் மேற்குறிப்பிட்ட இரு விமானங்களும் கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி கிடைக்கவில்லை. இதனையடுத்து, இரு துபாய் விமானங்களும் கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டன.
அதன்படி, தம்மாம் விமானம் காலை 7.35 மணிக்கு கோவை விமான நிலையத்தில் தரையிறங்கியது. அதைத் தொடர்ந்து துபாய் விமானம் காலை 7.45 மணிக்கு தரையிறங்கியது. வானிலை சீரடைந்ததாக பெறப்பட்ட தகவலையடுத்து மீண்டும் இரு விமானங்களும் முறையே காலை 8.38 மற்றும் 8.44 மணிக்கு கோழிக்கோடு புறப்பட்டுச் சென்றன.