கல்விப் பொது தராதர பத்திர (சாதாரண தரப் ) பரீட்சை முடிவடைந்தவுடன் உயர்தர வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி

தற்போது இடம்பெற்றவரும் 2023ம் வருடத்துக்கான 2024 மே மாதத்தில் கல்வி பொது தராதரப் பத்திர சாதாரண பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான அப்பரீட்சை முடிவடைந்தவுடன் கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான வகுப்புகளை ஆரம்பிப்பதற்காக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம் ஜெயந்தவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை முடிவடைந்ததும் அதன் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு இலங்கை பரீட்சைகள் திணைக்களத்திற்கு ஆகக் குறைந்தது மூன்று மாதங்கள் செல்லும்.

இக்காலப் பகுதியினுள் பாடசாலை கல்வியில் இருந்து விலகி இருத்தல், பின்னர் அவர்கள் கல்வி பொது தராதர உயர் தரத்தைத் தொடருதல் குறைவதனால் சமூக சிக்கல்கள் உருவாவதற்கு காரணமாகின்றன.

இந்த விடயத்தை கருத்தில் கொண்டு மாணவர்களின் காலத்தை வினைத்திறனாக முகாமைத்துவம் செய்வதற்கு மற்றும் கல்விப் பொதுத்தராதரப் பத்திர (உயர்தர) பாடத்திற்கான சிபாரிசுகளை உள்ளடக்குவதற்காக எனக்கு போதுமான காலம் வழங்கக்கூடியதாக, 2023 இற்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தரப் ) பரீட்சை நிறைவடைந்தவுடன் உயர் தர வகுப்பிற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்தல் பொருத்தமாக இருக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.