கேரள மாநிலம், கோழிக்கோடு நாதாபுரம் பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவரது மனைவி சுலோச்சனா (57). நடன ஆசிரியராக இருந்தார். சுலோச்சனாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து மலப்புறம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கிருந்து அவசர அறுவை சிகிச்சைக்காக கோழிக்கோடு மிம்ஸ் மருத்துவமனைக்கு இன்று அதிகாலை ஐ.சி.யு வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டார். சுலோச்சனாவுக்கு உதவியாக அவரது கணவர் சந்திரன், மற்றும் உறவினர் பிரஸிதாவும் இருந்துள்ளனர். மேலும், ஒரு மருத்துவர், 2 நர்ஸ்களும் இருந்துள்ளனர். லேசான மழை பெய்துகொண்டிருந்ததால் சாலை ஈரமாக கிடந்துள்ளது. கோழிக்கோடு மிம்ஸ் மருத்துவமனைக்கு அருகில் ஆம்புலன்ஸ் சென்றுகொண்டிருந்தபோது, அதிகாலை 3 மணியளவில் திடீரென கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதையடுத்து ஆம்புலன்ஸ் சாலை ஓரம் உள்ள மின் கம்பத்தில் மோதியதுடன், அருகில் உள்ள டிரான்ஸ்பார்மரிலும் மோதியது. மோதிய வேகத்தில் கவிழ்ந்த ஆம்புலன்ஸில் இருந்து சுலோச்சனாவை தவிர மற்ற அனைவரும் தூக்கி வெளியே வீசப்படுள்ளனர். டிரைவரும் வெளியே விழுந்துள்ளார்.
மின்கம்பத்தில் மோதிய வேகத்தில் ஆம்புலன்ஸ் முழுவதும் தீப்பிடித்து எரிந்துள்ளது. அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் பணியில் இருந்த இரவு காவலர், இது குறித்து போலீஸ் மற்றும் தீயணப்புத்துறைக்கு தகவல் அளித்துள்ளார். மீன் சந்தை தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள் வாகனத்தில் விரைந்து சென்று தீயை அணைத்தனர். அதற்குள் ஆம்புலன்ஸில் இருந்த சுலோச்சனா தீயில் கருகி பலியானார். அவரது சடலத்தை தீயணைப்பு வீரர்கள் ஆம்புலன்ஸில் இருந்து வெளியே எடுத்தனர்.
ஆம்புலன்ஸில் இருந்து வெளியே விழுந்ததில் காயமடைந்த மருத்துவர், 2 நர்ஸுகள், டிரைவர் மற்றும் சுலோச்சனாவின் கணவர் சந்திரன், உறவினர் பிரஸிதா உள்ளிட்டோர் உடனடியாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். சுலோச்சனாவின் கணவர் சந்திரன் படுகாயம் அடைந்தார், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மருத்துவர், ஒரு நர்ஸ், டிரைவர் ஆகியோர் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுகுறித்து கோழிக்கோடு மெடிக்கல் காலேஜ் போலீஸார் விசாரணை நடத்தி, கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதாக ஆம்புலன்ஸ் டிரைவர் கண்ணூரைச் சேர்ந்த அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb