இலங்கை கல்வி நிர்வாக சேவை, இலங்கை ஆசிரியர் கல்வியலாளர் சேவை மற்றும் இலங்கை அதிபர் சேவைக்குரிய அதிகாரிகள் 1,000 பேரை தேசிய மாணவர் படையணியின் பதவி நிலைக்கு நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தகைமை வாய்ந்த அதிகாரிகள் 1,000 பேருக்கு முறையாக தெரிவு செய்யப்பட்ட 03 பிரிவின் கீழ் பயிற்சியளிக்கப்பட்ட பதவிநிலை அதிகாரிகளாக நியமிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி அ மற்றும் கல்வி அமைச்சர் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பாக 13.05.2024 அன்று நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:
06. இலங்கை கல்வி நிர்வாக சேவை, இலங்கை ஆசிரியர் கல்வியலாளர் சேவை மற்றும் இலங்கை அதிபர் சேவைக்குரிய அதிகாரிகள் 1,000 பேரை தேசிய மாணவர் படையணியின் பதவி நிலைக்கு நியமித்தல்
1985 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க மனிதவலுப் பயன்பாடு மற்றும் துணை இராணுவ சட்டத்தின் V பிரிவின் கீழ் துணை இராணுவ நிறுவனமாக தேசிய மாணவர் படையணி பாதுகாப்பு அமைச்சின் கீழ் தாபிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் முறையாக குறித்த படையணியின் அதிகாரிகள் மற்றும் மாணவர் படையினராக இணைக்கப்படுகின்றனர். கல்வித் துறையில் மாணவர் படை நடவடிக்கைகளை மேலும் ஊக்குவிப்பதற்காக பதவிநிலை அதிகாரிகளாக இலங்கை கல்வி நிர்வாக சேவை, இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை மற்றும் இலங்கை அதிபர் சேவை போன்ற சேவைகளுக்குரிய அதிகாரிகளை தேசிய மாணவர் படையணியில் இணைத்துக் கொள்வதற்காக அடிப்படை பயிற்சி பாடநெறியை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன், குறித்த சேவைகளில் I, II மற்றும் III ஆம் தரங்களிலுள்ள அதிகாரிகள் 1,000 பேரை இணைத்துக் கொள்வதற்கான அடிப்படை பயிற்சி பாடநெறியின் பின்னர் பதவிநிலை அதிகாரிகளாக நியமிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய இலங்கை கல்வி நிர்வாக சேவை, இலங்கை ஆசிரியர் கல்வியலாளர் சேவை மற்றும் இலங்கை அதிபர் சேவை போன்ற சேவைகளுக்குரிய தகைமை வாய்ந்த அதிகாரிகள் 1,000 பேருக்கு முறையாக தெரிவு செய்யப்பட்ட 03 பிரிவின் கீழ் பயிற்சியளிக்கப்பட்ட பதவிநிலை அதிகாரிகளாக நியமிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் மற்றும் கல்வி அமைச்சர் அவர்கள் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது