போட்டிப் பரீட்சையொன்றின் போது சிக்கல்கள் ஏற்படுகின்ற எல்லா சந்தர்ப்பங்களிலும் மாணவர்களுக்கு அநீதி ஏற்;படாத விதத்தில் புள்ளிகள் வழங்கக்கூடிய நடைமுறையொன்று மேற்கொள்ளப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர், போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (14) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உதாரணமாக, ஏதேனுமொரு நீக்கப்பட்ட பகுதியிலிருந்;து வினாப்பத்திரம் ஒன்று தயாரிக்கப்படடிருந்தால், அந்த வினாவிற்கு விடையளித்தவர்களுக்கும், விடையளிக்காதவர்களுக்கும் அநீதி ஏற்படாத வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளினால் புள்ளிகள் வழங்கப்படும் நடைமுறை ஒன்று மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தானும் முன்னாள் கல்வி அமைச்சர் என்பதை நினைவுகூர்ந்த அமைச்சர், இந்தப் பரீட்சை செயல்முறை மிகவும் சிக்கலான செயலாகும் எனவும், பரீட்சை திணைக்களம் கடினமான பணியை மேற்கொள்வதாகவும், தேசிய கல்வி நிறுவகத்தினால் பாடத்திட்டம் தயாரிக்கப்படும் போது, அது தொடர்பான பாடப்புத்தகங்கள் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் அச்சிடப்படுவதுடன், பரீட்சை வினாப்பத்திரங்கள் பரீட்சை திணைக்களத்தனால் மேற்கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும், அவற்றைத் தயாரிப்பதற்கான வளங்கள் வேறு வழிகளில் பயன்படுத்தப்படுகின்றன., அத்துடன், அதிகளவான வினாப்பத்திரங்கள் தயாரிக்கும்போது சிக்கல்கள் ஏற்படுவதாகவும், அந்த சந்தர்ப்பங்களில் மாணவர்களுக்கு அநீதி ஏற்படாத வகையில் புள்ளிகள் வழங்கும் முறையொன்று தயாரிக்கப்படும்; என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.