சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி… வெற்றியுடன் முடித்தது டெல்லி – இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!

DC vs LSG Match Highlights: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. 64ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்களை எடுத்தது. டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் அபிஷேக் போரெல் 58 ரன்களையும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 57 ரன்களையும் எடுத்தனர். கூடவே ஷாய் ஹோப் 38 ரன்களையும், ரிஷப் பண்ட் 33 ரன்களையும் எடுத்து ஆறுதல் அளித்தனர். லக்னோ அணி பந்துவீச்சில் நவீன் உல் ஹக் 2 விக்கெட்டுகளையும், அர்ஷத் கான் மற்றும் ரவி பிஷ்னோய் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். அதிரடி வீரர் ஜேக் ஃபிரேசர்-மெக்கர்க் இந்த போட்டியில் அர்ஷத் கான் பந்துவீச்சில் முதல் ஓவரிலேயே டக்அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். 

லக்னோ சொதப்பல்

209 ரன்கள் என்ற இலக்கை துரத்திய லக்னோவுக்கு இந்த முறையும் பவர்பிளே சிறப்பாக இல்லை. 4 விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தாலும், நிக்கோலஸ் பூரன் மட்டும் அதிரடியாக ரன் குவித்தார். அக்சர் பட்டேல் ஓவரில் 20 ரன்களை குவித்து அதிர்ச்சியளித்தார். பவர்பிளேவில் 59 ரன்களை லக்னோ அடித்தாலும் 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அடுத்த பதோனி 6 ரன்களில் ஆட்டமிழந்து மேலும் அதிர்ச்சியளித்தார். 

அதிரடியாக விளையாடி வந்த பூரன் 27 பந்துகளில் 6 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 61 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து 6 விக்கெட்டுகள் விழுந்தாலும் அர்ஷத் கான் அதிரடியாக விளையாட டெல்லி அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர் அதிரடியாக ரன்களை குவித்தார். இருப்பினும் மறுமுனையில் விக்கெட்டுகள் விழுந்ததால் லக்னோ அணி தோல்வியை தழுவியது. லக்னோ அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 189 ரன்களை அடித்தது. இதன்மூலம் டெல்லி அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அர்ஷத் கான் 33 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 58 ரன்களை அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளையும், கலீல் அகமது, அக்சர் பட்டேல், முகேஷ் குமார், குல்தீப் யாதவ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினார்.

Make way for the

They become the second team to #TATAIPL 2024 

Which teams will join the race

Points Table https://t.co/3ESMiCruG5@rajasthanroyals pic.twitter.com/5uwWKfTDfc

— IndianPremierLeague (@IPL) May 14, 2024

இனி இந்த 3 அணிகளுக்கே மோதல்

இந்த போட்டியில் தோல்வியடைந்தால் லக்னோ அணிக்கு பிளே ஆப் சுற்று வாய்ப்பு மிகவும் குறைந்துள்ளது எனலாம். இன்னும் ஒரு போட்டி மட்டுமே லக்னோ அணிக்கு உள்ளது. மே 17ஆம் தேதி மும்பை அணிக்கு எதிராக லக்னோ மோதுகிறது. இந்த போட்டியில் லக்னோ வென்றாலும் பிளே ஆப் வாய்ப்புக்காக பல அணிகளையும், நெட் ரன்ரேட்டையும் சார்ந்திருக்க வேண்டும். லக்னோவின் தோல்வியால் சிஎஸ்கே அணிக்கே அதிக சாதகம் எனலாம். ஏனென்றால், அடுத்து ஆர்சிபி – சிஎஸ்கே போட்டி மழையால் ரத்தாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அப்படி மழை குறுக்கிட்டு இரு அணிகளும் தலா 1 புள்ளியை பெற்றால் சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுவிடும். 

டெல்லி அணி அனைத்து போட்டிகளையும் விளையாடிவிட்டது. 14 புள்ளிகளுடன் தொடரை டெல்லி நிறைவு செய்துள்ள நிலையில், இனி மற்ற அணிகளின் வெற்றி தோல்விக்காக காத்திருக்க வேண்டும். குறிப்பாக, சன்ரைசர்ஸ், சென்னை அணிகள் அடுத்தடுத்த போட்டியில் தோல்வியடைந்தால் மட்டுமே டெல்லிக்கு வாய்ப்பு இருக்கும். எனினும் இதன் வாய்ப்பும் மிக குறைவுதான். லக்னோ தோல்வியால் ராஜஸ்தான் அணி அதிகாரப்பூர்வமாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டது என்பதால் மீதம் உள்ள 2 இடங்களுக்கு ஹைதராபாத், சிஎஸ்கே, பெங்களூரு அணிகள் மோதுகின்றன எனலாம். டெல்லி, லக்னோ அணிகளை விட இந்த மூன்று அணிகளுக்கே அதிக வாய்ப்பிருக்கிறது. 

 

 

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.