இலங்கை பிரஜைகள் எந்த காரணத்துக்காகவும் வெளிநாடுகளுக்குச் செல்வதாயின் அதிலும் தமக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார கஷ்டம் காரணமாக செல்வார்களாயின் அதற்கு அரசாங்கமாக முடிந்தவரை நாம் உதவுவோம்.
அதனால் சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாம் என அமைச்சரவை பேச்சாளர் பேராசிரியர் பந்துல குணவர்தன அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டின் போது கோரிக்கை இவ்வாறு விடுத்தார்.
ஆனால் நாம் அனைவரும் இலங்கை பிரஜைகளாக புரிந்து கொள்ள வேண்டும்.சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்வதை தவிர்ப்பதற்காக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம், வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சு, வெளிநாட்டு அமைச்சு, வெளிநாட்டு தூதுவராலயங்கள் என்பன இணைந்துசட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம் என அடிக்கடி தெரியப்படுத்துகிறோம்.
தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்..
வேண்டும் என்றே, சொல்லும் போது மீண்டும் மீண்டும் அவ்வாறே செய்வதாயின் ஏதாவது ஒரு அசம்பாவிதம் ஏற்படும் போது அரசாங்கத்திற்கு விடை தேட முடியாது. அது நியாயமும் அல்ல என்றார். நாம் பிரஜைகளாக இந்த அபாயகரமான நிலைமையினை தடுப்பதற்காக பங்களிப்புச் செய்ய வேண்டும்.
பல நாடுகளுக்கு படகுகள் மூலம் வேறு நாடுகளுக்கும் சென்று கொடுக்க முடியாத சிரமங்களுக்கு முகம் கொடுக்கும் நபர்கள் தினமும் கரித்து வருகிறார்கள் அவர்கள் எமக்குத் தெரியாத நாடுகளில் கூட போய் தஞ்சமடைகிறார்கள். இலகுவாக செல்லக்கூடிய நாடுகளுக்கு கூட சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும், அப்படி இருந்தும் கைவிடப்படுகிறார்கள். இந்நிலையை தவிர்ப்பதற்காக மக்களிடம் தான் அதற்கான பொறுப்பு உள்ளது. உத்தியோகபூர்வமற்ற முறையில் அங்கு போய் தொழில் தேடும் நோக்கில் எந்த ஒரு நாட்டுக்கும் செல்லாதிருக்கும் பொறுப்பை மக்கள் பொறுப்பெடுக்க வேண்டும் என அமைச்சரவை பேச்சாளரும் நெடுஞ்சாலைகள் வெகுசன ஊடக அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன கோரிக்கை விடுத்தார்.