நியாயமான உணர்வுக்கும்‌ மதிப்பளியுங்கள்;‌ தாழ்ந்த விமர்சனங்கள்‌ வைப்பது ஏற்புடையதல்ல- ஜி.வி.பிரகாஷ்

“ஒவ்வொரு தனி மனிதரின்‌ நியாயமான உணர்வுக்கும்‌ மதிப்பளியுங்கள்‌” என்று விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜி.வி. பிரகாஷ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் ஒருவரையொருவர் காதலித்து கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர். இருவருக்கும் ‘அன்வி’ எனும் மகளும் உள்ளார். இதனிடையே இருவரும் விவகாரத்துப் பெற உள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில் 11 வருட காதல் திருமண வாழ்க்கையை இருவரும் முறித்துக் கொள்வதாக சில தினங்களுக்கு முன் ஜி.வி. பிரகாஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஜி.வி பிரகாஷ் குமார்

இதனைத்தொடர்ந்து பல்வேறு விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் முன்வைக்கபட்டன. இந்நிலையில் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜி.வி. பிரகாஷ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். ” புரிதலும்‌, போதுமான விவரங்கள்‌ இல்லாமலும்‌ அனுமானத்தின்‌ பேரில்‌ ஒரு மனங்கள்‌ இணைவது, பிரிவது குறித்து பொதுவெளியில்‌ விவாதிக்கப்படுவது துரதிஷ்டவசமானது. பிரபலமான நபராக இருப்பதாலே ஒருவரின்‌ தனிப்பட்ட வாழ்விற்குள்‌ அத்துமீறி நுழைந்து தரம்‌ தாழ்ந்த விமர்சனங்கள்‌ வைப்பதும்‌ ஏற்புடையதல்ல.

தங்களின்‌ கற்பனைக்கு வார்த்தைகள்‌ மூலம்‌ வடிவம் கொடுத்து சமூக ஊடகங்களில்‌ வெளிப்படுத்துவதால் அது “யாரோ ஒரு தனிநபரின்‌” வாழ்க்கையை பாதிக்கும்‌ என்பதை உணராத அளவுக்கு தமிழர்‌ மாண்பு குறைந்து விட்டதா… ஒருவரும்‌ பரஸ்பரம்‌ ஒப்புக்கொண்டு பிரிந்ததன்‌ பின்னணியையும்‌, காரணங்களையும்‌ என்னுடன்‌ நெருங்கிய பழகிய நண்பர்கள்‌, உறவினர்கள்‌ நன்கறிவார்கள்‌. அனைவரிடமும்‌ கலந்தாலோசித்து பின்புதான்‌ இருவரும்‌ இந்த முடிவை மேற்கொண்டோம்.

எங்களை பிரபலங்களாக உருவாக்கிய உரிமையிலோ அல்லது என்‌ தனிப்பட்ட வாழ்க்கை மீது தங்களுக்கு இருந்த பேரன்பின் வெளிப்பாடாகவோ தங்களின்‌ ஆதங்கமான விமர்சனங்கள்‌ இருந்தாலும்‌ சம்பந்தப்பட்டவர்களின்‌ மனதை அது மிகவும்‌ காயப்பருத்துகிறது என்பதை உணர்த்தவே இதை பதிவிடுகிறேன். ஒவ்வொரு தனி மனிதரின்‌ நியாயமான உணர்வுக்கும்‌ மதிப்பளியுங்கள்‌. தங்களின்‌ பேரன்புக்கும் ஆதரவுக்கும்‌ என்‌ நெஞ்சார்ந்த நன்றி” என்று அப்பதிவில் குறிபிட்டிருக்கிறார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.