ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்லோவாக்கியா (Slovakia) நாட்டின் பிரதமர் ராபர்ட் ஃபிகோ (Robert Fico), இன்று அமைச்சரவைக் கூட்டத்தை முடித்துவிட்டுத் திரும்பியபோது துப்பாக்கிச்சூட்டுக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தத் தாக்குதலில் பலமுறை அவர் மீது துப்பாக்கியால் சுடப்பட்டதால், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டிருக்கிறார்.
மறுபக்கம், துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீஸார் கைதுசெய்தனர். துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது பிரதமரை வேகமாக காரில் ஏற்றிச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக அந்த நாட்டின் அரசு, `இன்று, ஹண்ட்லோவாவில் (Handlova) நடந்த அரசாங்கக் கூட்டத்திற்குப் பிறகு, ஸ்லோவாக் குடியரசின் பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீது படுகொலை முயற்சி நடந்தது. அவர் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் ஹெலிகாப்டர் மூலம் பான்ஸ்கா பைஸ்ட்ரிகாவுக்கு (Banska Bystrica) கொண்டு செல்லப்படுகிறார்’ என்று சமூக வலைதளப் பதிவில் தெரிவித்திருக்கிறது.
இந்த சம்பவத்துக்கு ஐரோப்பியத் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். ஸ்லோவாக்கியா அதிபர் Zuzana Caputova, `பிரதமர் மீது இன்று நடத்தப்பட்ட மிருகத்தனமான தாக்குதலால் அதிர்ச்சியடைந்தேன். இதைக் கடுமையாகக் கண்டிக்கிறேன்’ என்று தெரிவித்திருக்கிறார். கடந்த ஆண்டு அக்டோபர் முதல் ஸ்லோவாக்கியாவின் பிரதமராக இருக்கும் ராபர்ட் ஃபிகோ, ஸ்லோவாக்கியாவுக்கும் அதன் அண்டை நாடான உக்ரைனுக்கும் இடையேயான உறவுகளைச் சீர்குலைக்கும் கருத்துகளை வெளியிட்டுவந்ததாகக் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb