சண்டிகர்,
அரியானா மாநிலம் அம்பாலா பகுதியில் நடைபெற்ற பா.ஜ.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“கடந்த 10 ஆண்டுகளில் 55 ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் போடப்பட்டுள்ளன. 7 ஐ.ஐ.டி. கல்லூரிகள், 7 ஐ.ஐ.எம். கல்லூரிகள், 390 பல்கலைக்கழகங்கள் மற்றும் 700 மருத்துவ கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன. இந்தியாவின் வளர்ச்சி சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது. வளர்ச்சியடைந்த நாடுகள் கூட இந்தியாவின் உள்கட்டமைப்பை பார்த்து ஆச்சரியமடைகின்றன.
கடந்த 60 ஆண்டுகளில் கட்டப்பட்ட விமான நிலையங்களுக்கு இணையாக, கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி விமான நிலையங்களை கட்டியுள்ளார். அம்பாலாவிலும் புதிய விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. பிரதமர் மோடியின் ஆட்சியில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். இது சிறிய எண்ணிக்கை கிடையாது.”
இவ்வாறு புஷ்கர் சிங் தாமி தெரிவித்தார்.