நிறங்கள் என்றால் யாருக்குதான் பிடிக்காது, பச்சை, மஞ்சள், சிவப்பு, இளஞ்சிவப்பு, ஊதா… பல வண்ணங்கள், பல அடையாளங்கள். ஆனால், இந்த அனைத்து நிறங்களும் உங்களின் கழிவறையில் கறையாகப் படிந்திருந்தால், நிறங்களையே வெறுத்து விடுவோம், அல்லவா?
ஒரு வீட்டில், டாய்லெட் சுத்தமாக இருந்தால் தான் அந்த வீட்டில் இருக்கும் அத்தனை பேரும் ஆரோக்கியமாக இருக்க முடியும். இந்நிலையில், நம் டாய்லெட்டில் உண்டாகியிருக்கும் பிரச்னைகள் என்ன, டாய்லெட்டில் உருவாகும் கறைகளால் உண்டாகும் பாதிப்புகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம். முக்கியமாக, கறையின் நிறத்தைப் பொறுத்து டாய்லெட்டில் இருக்கும் பிரச்னைகள் வேறுபடும் என்று கூறப்படுகிறது.
ஒவ்வொரு நிறத்திற்கும், ஒவ்வோர் அறிகுறியா?
பச்சை நிறத்தில் உருவாகும் கறை:
கழிவறைகள் ஈரப்பதம் நிறைந்தவை, அதோடு குறைந்த காற்றோட்டம் கொண்டவை. இதனால், உங்களின் கழிவறையில் பூஞ்சை மற்றும் பூஞ்சணம் படிமங்கள் உருவாவதற்கு வாய்ப்புகள் அதிகம். அந்தக் கழிவறையைப் பயன்படுத்துபவர்களுக்கு சுவாச நோய்களும், ஒவ்வாமை எதிர்வினைகளும் வர வாய்ப்புண்டு. உங்களின் கழிவறையில் பச்சை நிற படிமங்கள் பூஞ்சையின் வரவை குறிக்கும்.
மஞ்சள் நிறத்தில் உருவாகும் கறை:
நம் வீட்டுக் கழிவறைகளில் மஞ்சள் நிற கறைப் படிமங்களைக் கண்டாலே போதும், மேற்கொண்டு நம்மால் அந்தக் கழிவறைக்குள்ளேயே நுழைய முடியாது.
யூரிக் அமிலம், யூரியா போன்ற சிறுநீரின் கூறுகள் மற்ற தாதுக்களுடன் (கால்சியம் கார்பனேட் மற்றும் சுண்ணாம்பு) கலப்பதால் ஈரப்பதம் அதிகம் இருக்கும் இடங்களில் மஞ்சள் நிறப் படிமங்கள் உருவாகின்றன.
இளஞ்சிவப்பு நிறத்தில் உருவாகும் கறை:
பாக்டீரியாக்கள் மிகவும் பொதுவான நுண்ணுயிரிகளில் ஒன்றாகும். நாம் கழிவறையை ஃப்ளஷ் செய்யும்போதெல்லாம், அதில் உருவாகும் காற்றில் ஏரோசோலைஸ் என்ற துகள்கள் வெளியாகின்றன. இதன் மூலம் கழிவறையில் பாக்டீரியா ஊடுருவலாம் என்றும் கூறப்படுகிறது. கழிப்பறையில் உருவாகும் இளஞ்சிவப்பு நிற படிமங்களை வைத்து இதன் ஊடுருவலை உறுதிபடுத்திகொள்ளலாம். இந்நிலையில் இருக்கும் கழிப்பறைகளைப் பயன்படுத்துபவர்களுக்கு பாக்டீரியா நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
சாம்பல் நிறத்தில் உருவாகும் கறை:
கழிப்பறையை கழுவும்போதும், ஃப்ளஷ் செய்யும்போதும் உபயோகப்படுத்தபடும் நீரின் கடினத் தன்மையால், அதன் சுற்றுப்புறங்களில் சாம்பல் நிறக் கறைகள் உருவாக வாய்ப்புள்ளது. கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்களின் படிவுகளால் இந்தப் பிரச்னை உருவாகிறது.
கறுப்பு நிறத்தில் உருவாகும் கறை:
கழிப்பறையில் எளிதில் உருவாகும் கறுப்பு நிறக் கறை, அதிகப்படியான ஈரப்பதம் மற்றும் குறைந்த காற்றோட்டத்தால் ஊடுருவும் பூஞ்சையைக் குறிக்கிறது.
பிரவுன் நிறத்தில் உருவாகும் கறை:
குளியல் உபகரணங்களில் பெரும்பாலானவை உலோகத்தில் இருப்பதால், அவை துருப்பிடிப்பது சகஜமான ஒன்று தான். அந்த துருக்களில் சில கழிப்பறைக்குள்ளும் செல்வதால், கழிப்பறைக்கு மேல் பிரவுன் நிறத்தில் துருக்களின் படிமம் உருவாகிறது. இது தவிர, தண்ணீரின் வழியாக மாங்கனீசு படிமங்கள் வரக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
அனைத்து கறைகளையும் சுத்தம் செய்ய என்ன செய்ய வேண்டும்?
கழிப்பறையில் படிந்திருக்கும் கறையைச் சுத்தம் செய்யாமல் உபயோகப்படுத்துவதால், அதைப் பயன்படுத்துபவர்களுக்கு நோய்த்தொற்றுக்கள் வரக்கூடும்.
நாம் கழிப்பறையைச் சுத்தம் செய்யும் உபகரணங்களையும், அமிலங்களையும் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியமாகிறது. காரணம், சில வகை அமிலங்கள்/ரசாயனங்கள் மூலமாகவும் கறைப் படிமங்கள் அதிகமாகலாம் என்றும் கூறப்படுகிறது.
வூக்கி ஃபியூம்-லெஸ் டாய்லெட் கிளீனர் பற்றி தெரியுமா?
வூக்கி நிறுவனத்தின் ஃபியூம்-லெஸ், ஹெவி டியூட்டி டாய்லெட் கிளீனர், எவ்வித அழுத்தமான கறைகளையும் போக்கக்கூடிய இயற்கை வேதிப்பொருள்களுடனும், அதே சமயம் அதை உபயோகப்படுத்துபவருக்கும் எவ்வித இடர்பாடுகளும் வராத கிரீன் ஃபார்முலாவுடனும் வருகிறது.
தொடர்ந்து கறைபடிந்த பகுதிகளில் இதைப் பயன்படுத்துவதால், விரைவிலேயே கறைகள் மறைந்து கழிப்பறை பளிச்சிடும்.
லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வூக்கியின் ஃபியூம்-லெஸ், ஹெவி டியூட்டி டாய்லெட் கிளீனரால் பயனடைந்துளார்கள். இதை உபயோகப்படுத்துவதன் மூலம், நாம் நம் கழிப்பறையை சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் வைத்துக்கொள்ளமுடியும். வூக்கியின் ஃபியூம்-லெஸ், ஹெவி டியூட்டி டாய்லெட் கிளீனர் உடனடியாக வாங்குவதற்கும், வூக்கியின் மற்ற வீட்டு சுகாதார பொருள்களை பற்றி தெரிந்து கொள்ளவும் இப்போதே www.vooki.in வெப்சைட்டிற்கு செல்லுங்கள்.