தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக பெய்து வரும் மழையால் கோடை வெயிலின் தாக்கம் குறைந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் அடுத்த 4 நாட்கள் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மாநில பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். தென்காசியில் பெய்து வரும் கனமழை காரணமாக குற்றால […]