புதுடெல்லி,
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரான இந்திய வீராங்கனை பர்வீன் ஹூடா, கடந்த ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் 57 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றதன் மூலம் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இடத்தை உறுதி செய்தார்.
அவர் உலக ஊக்க மருந்து தடுப்பு முகமையினர், தன்னிடம் ஊக்க மருந்து சோதனை நடத்த வருவதற்கு வசதியாக எங்கு இருக்கிறேன் என்ற தகவலை கடந்த ஒரு ஆண்டில் 3 முறை அளிக்க தவறிவிட்டார். இதனையடுத்து பிரவீன் ஹூடாவை 1½ ஆண்டு காலம் இடைநீக்கம் செய்து உலக ஊக்க மருந்து தடுப்பு முகமை நடவடிக்கை எடுத்து இருக்கிறது.
இந்த மாதத்தில் இருந்து தொடங்கும் அவரது தடை காலம் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் முடிவுக்கு வருகிறது. இதனால் அவர் பெற்ற ஒலிம்பிக் கோட்டாவை இந்தியா இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த தடையை எதிர்த்து பிரவீன் தரப்பில் அப்பீல் செய்யப்பட்டுள்ளது.