இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற மைக்ரோ எஸ்யூவி டாடா பஞ்ச், அதன் போட்டியாளர் ஹூண்டாய் எக்ஸ்டர் உடன் அதே விலை பிரிவில் வந்துள்ள பிரசத்தி பெற்ற மாருதி சுசூகி ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் மாடலை ஒப்பீடு செய்து முக்கிய விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
குறிப்பாக ரூ.6 லட்சம் முதல் ரூ.10 லட்சத்திற்குள் உள்ள பல்வேறு மாடல்களை எதிர்கொள்ளுகின்ற ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக்கிற்கும், இந்த மைக்ரோ எஸ்யூவி மாடல்களுக்கும் நேரடி போட்டியில்லை என்றாலும் விலையின் அடிப்படையில் மட்டுமே இங்கு தொகுத்து வழங்கியுள்ளேன்.
மாதந்தோறும் 14,000க்கு மேற்பட்ட பஞ்ச் மற்றும் ஸ்விஃப்ட் மாடல்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் எக்ஸ்டர் எஸ்யூவி 7000க்கு கூடுதலான எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றது.
Swift Vs Punch Vs Exter என்ஜின், மைலேஜ் ஒப்பீடு
புதிதாக சந்தைக்கு வந்துள்ள 2024 மாருதி ஸ்விஃப்ட் அதிக மைலேஜ் தருகின்ற மாடலாக லிட்டருக்கு 25 கிமீ வரை வழங்கும் நிலையில் மூன்று சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு 82hp பவர் மற்றும் 112Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் உள்ளது.
அடுத்து டாடாவின் பஞ்ச் எஸ்யூவி 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 3 சிலிண்டர் 86 hp பவர் மற்றும் 113 Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
இறுதியாக, ஹூண்டாய் எக்ஸ்டரில் 1.2 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் கொண்ட மாடலில் 83 hp பவர் மற்றும் 114 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த காரிலும் 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் உள்ளது.
மேலும் ஒப்பீடு விபரம் எளிமையாக அறிய அட்டவனையில் வழங்கப்பட்டுள்ளது.
Maruti Swift | Hyundai Exter | Tata Punch | |
என்ஜின் | 1.2L, 3Cyl | 1.2L, 4 Cyl, | 1.2L, 3Cyl |
பவர் | 82PS at 6000rpm | 83PS at 6000rpm | 86PS at 6000rpm |
டார்க் | 112Nm at 4300rpm | 114Nm at 4000rpm | 113Nm at 3300rpm |
கியர்பாக்ஸ் | 5MT/AMT | 5MT/AMT | 5MT/AMT |
மேனுவல் மைலேஜ் | 24.80Kmpl | 19.4 kmpl | 20.09 Kmpl |
AMT மைலேஜ் | 25.75Kmpl | 19.2kmpl | 18.8 kmpl |
இரண்டு மைக்ரோ எஸ்யூவி மாடல்களும் மைலேஜ் சராசரியாக 19 கிமீ முதல் 20 கிமீ வெளிப்படுத்தும் நிலையில் ஹேட்ச்பேக் ரக மாருதி ஸ்விஃப்ட் லிட்டருக்கு 25 கிமீ வழங்கும் நிலையில் போட்டியாளர்களை விட சிறந்த மைலேஜ் வழங்கும் காராக விளங்குவதுடன் உண்மையான மைலேஜ் சராசரியாக லிட்டருக்கு 20-21 கிமீ வரை ஸ்விஃப்ட் கார் வழங்கலாம்.
கூடுதலாக மற்ற இரண்டும் சிஎன்ஜி ஆப்ஷனை பெற்றிருக்கின்ற நிலையில் மாருதி ஸ்விஃப்ட் சிஎன்ஜி அடுத்த சில மாதங்களுக்குப் பிறகு சந்தைக்கு வரக்கூடும்.
ஸ்விஃப்ட் Vs பஞ்ச் vs எக்ஸ்டர் அளவுகள் ஒப்பீடு
மூன்று கார்களிலும் ஒரே மாதிரியான வீல்பேஸ் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் பூட்ஸ்பேசில் அதிகபட்ச இடவசதியை எக்ஸ்டர் வழங்குகின்றது. மூன்று மாடல்களுக்கான ஒப்பீடு அட்டவனை கீழே உள்ளது.
Maruti Swift | Hyundai Exter | Tata Punch | |
நீளம் | 3860mm | 3815mm | 3827mm |
அகலம் | 1735mm | 1710mm | 1742mm |
உயரம் | 1520mm | 1631mm | 1615mm |
வீல்பேஸ் | 2450mm | 2450mm | 2445mm |
கிரவுண்ட் கிளியரண்ஸ் | 163mm | 185mm | 187mm |
பூட் ஸ்பேஸ் | 265L | 391L | 366L |
டேங்க் | 37L | 37L | 37L |
Wheel Size (Base) | 165/70 R14 | 165/70 R14 | 185/70 R15 |
Wheel Size (Top) | 185/65 R15 | 175/65 R15 | 195/60 R16 |
ஸ்டைலிங் ஹேட்ச்பேக் ரக ஸ்விஃப்ட் மாடலுடன், பாக்ஸ் ஸ்டைல் பெற்ற எஸ்யூவி மாடல்களுக்கு இணையான வடிவமைப்பினை இந்த சிறிய எஸ்யூவிகள் பெற்றுள்ளன.
2024 Maruti Swift Vs Tata Punch Vs Hyundai Exter விலை ஒப்பீடு
ரூ.6 லட்சத்துக்கும் கூடுதலான விலையில் துவங்குகின்ற மூன்று மாடல்களில் இரண்டு எஸ்யூவிகளும் ஸ்விஃப்ட் காரை விட குறைந்த விலையில் அமைந்திருந்தாலும் பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் 6 ஏர்பேக்குகளை மூன்று மாடல்களும் அடிப்படையாகவே கொண்டுள்ளன.
2024 Maruti Swift | EX-showroom Price | On-Road Price |
Maruti Swift | ₹ 6,49,000 – ₹9,64,500 | ₹ 7,88,032 – ₹ 11,58,981 |
Tata Punch | ₹ 6,12,900 – ₹ 10,19,900 | ₹ 7.49,654 – ₹ 12,78,654 |
Hyundai Exter | ₹ 6,12,800 – ₹ 10,27,900 | ₹ 7,49,021 – ₹ 12,89,543 |
கொடுக்கப்பட்டுள்ள விலை ஒப்பீடு பட்டியல், தமிழ்நாடு ஆன்-ரோடு விலை ஆகும். கூடுதல் ஆக்செரிஸ் சேர்க்கப்படும்பொழுது விலை மாறுபடும்.