2024 ஆம் ஆண்டின் இறுதியில் இந்திய சந்தையில் வெளியிடப்பட உள்ள லீப்மோட்டார் நிறுவனத்தின் T03 ஹேட்ச்பேக் எலக்ட்ரிக் காரை பற்றி முக்கிய தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
2023 ஆம் ஆண்டு ஸ்டெல்லண்ட்டிஸ் குழுமம் 20 % பங்குளை கைபற்றியிருந்த நிலையில் லீப்மோட்டாரில் கொண்டிருந்த நிலையில் சமீபத்தில் ஐரோப்பா உட்பட இந்தியா மற்றும் வளரும் நாடுகளுக்கான சந்தைகளில் விரவுப்படுத்த 49 % பங்குகளை ஸ்டெல்லண்டிஸ் மற்றும் லீப்மோட்டார் 51 % பங்குகளை கொண்டுள்ளது.
Leapmotor T03
லீப்மோட்டார் நிறுவனத்தின் குறைந்த விலை ஹேட்ச்பேக் ரக மாடலில் T03 காரில் மூன்று விதமான பேட்டரி ஆப்ஷனை பெற்றுள்ளது. சீன சந்தையில் கிடைக்கின்ற மாடல் அதிகபட்சமாக மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும் திறனுடன் 21.6kwh, 31.9kwh மற்றும் 41.3kwh என மூன்று விதமான பேட்டரி ஆப்ஷனை கொண்டுள்ளது.
2400 மிமீ வீல்பேஸ் பெற்றுள்ள T03 எலக்ட்ரிக் காரில் 40kw பவர் மற்றும் 96 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற துவக்கநிலை 21.6 kwh பேட்டரி அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் 200கிமீ வெளிப்படுத்துகின்றது. 55kw பவர் மற்றும் 114 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற 31.9 kwh பேட்டரி அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் 310கிமீ கொண்டுள்ளது.
80kw பவர் மற்றும் 158 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற 41.3kwh பேட்டரி ஆப்ஷனை பெற்ற டாப் வேரியண்டில் 403 கிமீ கொண்டுள்ளது.
நீளம் 3620மிமீ, 1652மிமீ மற்றும் 1605மிமீ உயரத்தை பெற்றுள்ள T03 காரில் Eco, Sport மற்றும் Standard என மூன்று விதமான டிரைவிங் மோடுகளை பெற்றுள்ளது.
சிறிய ரக ஹேட்ச்பேக் டி03 காரில் மிக நேர்த்தியான முன்புற அமைப்புடன் 14 அங்குல வீல் பெற்றுள்ளது. இன்டிரியரில் 8 அங்குல டிஜிட்டல் கிளஸ்ட்டர் மற்றும் 10.1 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளை கொண்டிருக்கின்றது.
இந்திய சந்தைக்கு விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள லீப்மோட்டாரின் T03 உற்பத்தி செய்யப்படுமா அல்லது முதற்கட்டமாக இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படுமா என்பது குறித்து எவ்விதமான உறுதியான தகவலையும் ஸ்டெல்லண்டிஸ் வெளியிடவில்லை.
ஸ்டெல்லண்டிஸ் நிறுவனத்தின் கீழ் இந்தியாவில் சிட்ரோன் மற்றும் ஜீப் என இரண்டு பிராண்டுகளை விற்பனை செய்து வருகின்ற நிலையில், சிட்ரோன் மூலம் லீப்மோட்டாரின் கார்களை தயாரிக்கவும் வாய்ப்புள்ளது.