`தலையில்லா உடல் எரிக்கப்பட்டதா?!’ பழனி அருகே பரபரப்பு – நடந்தது என்ன?

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கோரிக்கடவு பகுதியில் நேற்று மாலை ஆடு மேய்க்க சென்றவர்கள் மயானப் பகுதியில் எரிந்த நிலையில் மனித எலும்புக் கூடுகள் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

கோரிகடவு

இதையடுத்து போலீஸார் நிகழ்விடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர். அதில் மனித உடல் பகுதி மட்டும் எரிக்கப்பட்ட நிலையில் அதன் எலும்பு கூடுகள் கிடந்தன. ஆனால் அதில் மண்டை ஓடு இல்லை. நெஞ்சு, கை, கால் பகுதி எலும்புகளை மீட்டு போலீஸார் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் பழனி அருகே மனித உடல் எரிக்கப்பட்டிருந்த தகவல் சுற்றுவட்டார மக்களுக்கு காட்டுத்தீ போல பரவி பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பழனி போலீஸாரிடம் விசாரித்தோம். “கோரிக்கடவு ஊராட்சியில் உள்ள மயானத்தில் இறந்தவர்களின் உடலை எரிக்கும் வழக்கம் மட்டுமே உள்ளது. இதனால் மயானத்தில் புதைப்பதற்கான வசதி மட்டுமே செய்யப்பட்டிருக்கிறது. எரிக்கும் வழக்கம் கொண்டவர்கள் பழனியில் உள்ள நவீன எரிவாயு மயானத்தில் மட்டுமே உடலை தகனம் செய்வர்.

எரிக்கப்பட்ட பகுதி

மேலும் கோரிக்கடவு பகுதியில் நேற்று முன்தினமோ யாரும் உயிரிழக்கவில்லை. எரிந்த நிலையில் கண்டெடுக்கபட்ட  எலும்புக்கூடு சிறுமியாக இருக்கலாம் சந்தேகிக்கிறோம். வேறு பகுதியில் கொலை செய்துவிட்டு கோரிக்கடவு மயானத்தில் தலையில்லாத உடல் பகுதியை எரித்துள்ளனரா என விசாரித்து வருகிறோம்” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.