`100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா?' – தீயாகப் பரவிய தகவல்… விளக்கமளித்த மின்சார வாரியம்!

தமிழக மின்சார வாரியத்திற்கு ரூ.1.75 லட்சம் கோடி கடன் இருப்பதாக கூறி கடந்த 2022-ம் ஆண்டு மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன்படி முதல் 100 யூனிட்கள் வரை எந்தவித கட்டணமும் இல்லை. 101 – 200 யூனிட்கள் வரை ரூ.225, 201 – 300 யூனிட் வரையில் ரூ.675 என ஒவ்வொரு பிரிவிலும் கட்டணம் எகிறியது. அதன் பிறகு 2023-ம் ஆண்டு வணிக இணைப்புகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்தச் சூழலில் 100 யூனிட் வரையிலான இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் போலியான தகவல் பரவியது.

மின் வாரியம்

அதில், ‘ஒரே பெயரில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் இருக்கும் பட்சத்தில், அவை ஒரே இணைப்பாக இணைக்கப்படும். பிறகு 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும்’ என்ற தகவல் இருந்தது. சமூக வலைதளங்களில் தீயாக பரவிய இந்த விஷயம் மக்களை அதிர்ச்சியடைய செய்தது. இந்த விவகாரம் மின்வாரியத்தின் கவனத்துக்கு சென்றதையடுத்து, ‘இத்தகவல் உண்மைக்குப் புறம்பானது’ என மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து மின்வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “சமூக வலைதளம் மற்றும் காட்சி ஊடகத்தில் வெளிவரும் 100 யூனிட் இலவச மின்சாரம் குறித்த செய்தி உண்மை நிலைக்கு மாறானது. தமிழ்நாடு மின்வாரியம் வீட்டு பயன்பாட்டிற்கான மின் இணைப்பிற்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படவில்லை. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகளுக்கு எதிராக மின் இணைப்பு பெற்று பயன்படுத்தி வரும் மின் இணைப்புகளை மட்டுமே கண்டறிந்து ஒருங்கிணைக்கும் பணி மேற்கொள்ளபடுகிறது.

தமிழ்நாடு மின்சார வாரியம்

இதேபோல், வீட்டுப் பயன்பாட்டுக்கென மின் இணைப்பு பெற்று அதனை ஆணையத்தின் விதிமுறைகளுக்கு எதிராக பொதுப் பயன்பாட்டுக்கு உபயோகிக்கப்படும் மின் இணைப்புகளை மட்டுமே கண்டறிந்து உரிய மின்கட்டண வீத மாற்றத்துக்கு உட்படுத்தப்படும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, ஆணைய விதிமுறைகளுக்கு எதிராக பயன்பாட்டில் உள்ள மின் இணைப்புகளினால், மின்வாரியத்துக்கு ஏற்படும் இழப்பைத் தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இத்தகைய முயற்சி காரணமாக, 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்வது குறித்து பொதுமக்கள், வீட்டு மின் உபயோகிப்பாளர்கள் அச்சமடைய தேவையில்லை. மேலும், வீட்டு பயன்பாட்டுக்கான மின் இணைப்புகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படமாட்டாது. அது தொடர்ந்து வழங்கப்படும் என்பது இதன் மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.