Experimental Sex Game: பாலியல் உறவின்போது கழுத்தை நெரித்த காதலன்; இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

கடந்த பிப்ரவரி 2, 2022 அன்று  26 வயதான நடனக் கலைஞர் ஜார்ஜியா புரூக் என்ற பெண், இங்கிலாந்தின் மேற்கு யார்க்ஷயரில் தனது வீட்டில் 31 வயதான காதலன் லூக் கேனனுடன் சோதனைமுறை பாலியல் விளையாட்டில் (Experimental Sex) ஈடுபட்டிருந்தபோது, மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி இறந்துள்ளார்.

காதலர்கள் இருவரும் குறிப்பிட்ட போதைப்பொருளை உட்கொண்ட பின்னர், இத்தகைய பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றனர். அப்போது லூக் கேனன், காதலி ப்ரூக் கழுத்தை நெரித்ததாகச் சொல்லப்படுகிறது. அதில் அவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மயக்கமடைந்திருக்கிறார். அதைக் கண்டு பீதியடைந்த காதலன், அவசர மருத்துவ உதவியை நாடியிருக்கிறார். அதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார்.

க்ரைம்

ஜார்ஜியா புரூக் இறந்ததையடுத்து, லூக் கேனன் மருத்துவமனையிலிருந்து வெளியேறியிருக்கிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்த போலீஸார், விசாரணை மேற்கொண்டு லூக் கேனனைத் தேட ஆரம்பித்தனர். பின்னர் சிறிது நேரத்தில் மருத்துவமனை அருகேயுள்ள காட்டில் லூக் கேனன் தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாகக் காணப்பட்டார். அவரின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில், இருவரும் பாலியல் விளையாட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. காதலர்கள் இத்தகைய முயற்சியின்போது சாட்டிங் செய்த மெசேஜ்களை போலீஸார், ஆராய்ந்து இந்த விஷயத்தை உறுதி செய்திருக்கின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக இங்கிலாந்து நீதிமன்றத்தில் நடந்த விசாரணையைத் தொடர்ந்து, நீதிமன்றம், `இளம்பெண்ணின் மரணம் சட்டவிரோதக் கொலை. கேனன் அவருடைய காதலியைக் கொல்ல விரும்பினார் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லையென்றாலும், அவர் கழுத்தை நெரித்ததன் காரணமாக இளம்பெண் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, உயிரிழந்திருக்கிறார் என்பது பிரேத பரிசோதனை அறிக்கையின் மூலம் தெரியவருகிறது. எனவே இளம்பெண் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற முடிவுக்கு வருகிறோம்’ எனத் தெரிவித்தது.

இருப்பினும் உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர், `கேனன், அவளை உண்மையாக விரும்பினார். அவளை நன்றாகவே கவனித்துக் கொண்டார். ஆனால், இத்தகைய சம்பவம் நடந்துவிட்டது, மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது’ எனக் குறிப்பிட்டிருக்கின்றனர்.

உயிரிழப்பு

இந்தச் சம்பவம் தொடர்பாகப் பேசிய பிரேத பரிசோதனை அதிகாரி, `இளைஞர்கள் விளையாட்டுத்தனமாக இத்தகைய விபரீதங்களில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும். இது போன்ற செயல்களில் கவனமாக இருக்க வேண்டும். இளம்பெண்ணின் மரணம், சமூகத்தில் மற்ற இளைஞர்களுக்கு நிச்சயம் ஒரு எச்சரிக்கையாக இருக்கும்’ என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.